பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 சேறலின் அவற்றை நீக்குதற்கும், வேழக்கரும்பு, கேழற்பன்றி என்புழித் தொக்கன இல்லையெனினும் தொகையென வேண்டப் படுமாகலான் அவற்றைத் தழுவுதற்கும், உருபு முதலாயின தொகுதலின் தொகையென்பார்க்கும் ஒட்டியொரு சொன்னிர் மைப்படுதலுந் தொகையிலக்கணமெனல் வேண்டும். அதன்ை 2一{匣L打 முதலாயின தொகுதல் எல்லாத் தொகையினுஞ் செல்லா மையான், எல்லாத்தொகைக் கண்ணுஞ் செல்லுமாறு ஒட்டி யொரு சொல்லாதல் தொகையிலக்கணமாய் முடிதலின் இவ் வாசிரியர்க்கு இதுவே துணிவெனப்படும்..... அதன்ை உருபும் உவமையும் உம்மையுந் தொகுதலாவது, தம் பொருள் ஒட்டிய சொல்லால் தோன்றத் தாம் ஆண்டுப் புலப்படாதே நிற்றலே யாம் எனச் சேவைரையர் பிளவுபடாது ஒன்றுபட்டிசைத் தலே தொயிைலக்கணமாம் என்னும் தம் கருத்தை நன்கு விளக்கியுள்ளார். வேற்றுமையுருபு முதலாயின. இடையே மறைந்து நிற்றலேயன்றி இரண்டு முதலிய சொற்கள் ஒட்டி யொரு சொல்லாதலும் தொகையிலக்கணமாம் என்னும் இக் கருத்து எல்லாத் தொகையும் ஒரு சொன்னடைய?’ (தொல்எச்ச24) எனவரும் குத்திரத்தில் இடம் பெற்றுள்ளமை இங்கு நினைக்கத்தகுவதாகும். வேற்றுமைத்தொகை என்பது வேற்றுமையுருபு தொக்க தொகையெனவும், வேற்றுமைப் பொருளையுடைய தொகை எனவும் விரியும். உவமத்தொகை, உம்மைத்தொகை, அன் மொழித்தொகை என்பனவும் அவ்வாறு விரியும். அன்மொழிஅல்மொழி-தொக்கதல்லாத மொழி. வினேத்தொகை -வினே யினதுதொகை, பண்புத்தொகை-பண்பினது தொகை. ஈண்டு விஜன பண்பு என்பன, அவற்றை யுணர்த்துஞ் சொற்களே. தொகைச் சொல்லர்வன இவையெனவுணர்த்தும் இச்சூத் திரத்தை அடியெற்றியமைந்தது, 361. வேற்றுமை வினேபண் புவமை யும்மை அன்மொழி யெனவத் தொகையாருகும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும்.