பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

397 இது தொகைச்சொற்களின் பெயரும் முறையும் தொகையும் கூறுகின்றது. (இ-ள்) வேற்றுமைத்தொகை, உவமத்தொகை, வினைத் தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித் தொகை எனத் தொகைச் சொற்கள் ஆறென்பர் ஆசிரியர், எ-று , அறுவகைத் தொகைச் சொற்களின் இலக்கணம் உணர்த் துங்கால், வேற்றுமையுருபும் உவமவுருபும் உம்மையும் வினேச் சொல்லீறும் பண்புச் சொல்லீறும் தொகுதலின் தொகையாயின என்றும், அவ்வப்பொருள் மேல் ஒன்றும் பலவுமாகிய சொற்கள் பிளவு படாது ஒற்றுமைப்படத் தம்முள் இயைதலின் தொகை யாயின என்றும் உரையாசிரியர்கள் இருவேறு வகையாகப் பெயர்க் காரணங் கூறியுள்ளார்கள் . ஐம்பாலறியும் பண்புதொகு மொழியும்? எனவும் செய் யுஞ் செய்த வென்னுங் கிளவியின், மெய்யொருங்கியலுந் தொழில்தொகு மொழியும்’ எனவும் உருபுதொகவருதலும்: எனவும் மெய்யுருபு தொகா விறுதியான ? எனவும் *பண்புதொக வரூஉங் கிளவியானும் எனவும் உம்மை தொக்க பெயர் வயினுைம்’ எனவும் வேற்றுமை தொக்க பெயர் வயினனும் எனவும் உம்மையெஞ்சிய இருபெயர்த் தொகைமொழி எனவும் தொகைச் சொற்களின் இடையே உருபு முதலியன தொக்கே (மறைந்தே) நிற்கும் என ஆசிரி யர் சூத்திரஞ் செய்தலின், வேற்றுமையுருபும், உவமவுருபும், உம்மும், வினேச்சொல்லீறும், பண்புணர்த்தும் ஈறும், இத் தொகைச் சொற்களின் புறத்தே இவையல்லாததோர் சொல் லும் தொக்குநிற்றலின் தொகைச் சொல்லாயின என்பதே அவர் கருத்தாயிற்று என நச்சிர்ைக்கினியர் தொகைமொழி பற்றிய தொல்காப்பியனர் கருத்தை நன்கு விளக்கியுள்ளார். செய்தான் பொருள், இருந்தான் மாடத்து என உருபு தொக்கு ஒருசொல் நீர்மைப் படாதனவுந் தொகையாவான்