பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 வேற்றுமை முதலான ஐவகையுருபுகளும் தொக்கு நின்ற மொழிகளின் புறத்தே அவற்றின் பொருள்களைத் தழுவிய பிற சொற்கள் மறைந்து நிற்க வருவது அன்மொழித் தொகையாம்: என்பது இதன்பொருளாகும். பண்புத்தொகைப்பட அமைந்த வெள்ளாடை என்னுஞ் சொல்லப் படுத்தலோசையாற் கூறிய வழி வெண்மையான ஆடையினை யுடுத்தாள்’ எனப் புறத்தே ஒருசொல் தொக்கு நிற்றலின், இது பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன் மொழித் தொகையாகும். உம்மைத் தொகைபட அமைந்த எதகர ஞாழல் என்பது தகரமும் ஞாழலும் விரவியமைந்த சாந்து எனப் புறத்தே பிறசொல் தொக்கு நிற்றலின், உம்மைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தெ கை யாகும். வேற்றுமைத் தொகைபட அமைந்த பொற்ருலி: என்பது பொன்லைாகிய தாலியினை அணிந்தாள்’ என ஒரு சொல் தொக்கு நிற்றலின் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகும். உவமத்தொகைபட அமைந்த அறற் கூந்தல்’ என்பது, அறல் போலும் கூந்தலே யுடையாள் எனப் புறத்தே ஒருசொல் தொக்குநிற்றலின் உவமத் தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகையா கும். வினைத்தொகைபட அமைந்த 'திரிதாடி என்பது திரிந்த தாடியினையுடையான் என ஒருசொல் புறத்தே மறைந்து நிற்றலின் வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன் மொழித்தொகையாகும். 巴°öö。 அவைதாம் முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலும் இருமொழி மேலும் ஒருங்குட னிலேயலும் அம்மொழி நிலேயா தன்மொழி நிலேயலும் அந்நான் கென்ப பொருணிலே மரபே. இது, தொகைச் சொற்களிற் பொருள் நிற்கும் இடங்கள் இத் துணையவெனக் கூறுகின்றது. (இ.ஸ்) முன் மொழியில் நிற்றலும், பின்மொழியில் நிற்ற லும், இரு மொழியிலும் நிற்றலும், அவற்றின்மேல் நில்லாது