பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 முதுபோத்து என இடையிலும், நீலம் என்பது நீலுண்டு கிலிகை எனக் கடையிலும் குறைக்கப்பட்டவாறும், அச்சொற் கள் அவ்விடங்களிலன்றிப் பிறவிடங்களிற் குறைத்தற்கு ஏலாமை யும் கண்டுகொள்க. குறைத்தலாவது ஒரு சொல்லிற் சிறிது நிற்பச் சிறிது கெடுத்தல். எனவே முழுவதுங் கெடுத்தலாகிய தொகுக்கும்வழித் தொகுத்தலின் இதுவேரும் என்பர் சேவைரையர். இச்சூத்திரப் பொருளைத் தழுவியமைந்தது, 155. ஒருமொழி மூவழிக் குறைதலு மனே த்தே. என வரும் நன்னூற் சூத்திரமாகும். 'ஒருமொழி முதல் இடை கடை யென்னும் மூன்றிடத்துங் குறைந்து வருதலுஞ் செய்யுள் விகாரமாம்?’ என்பது இதன் பொருள் . சடுச. குறைத்தன வாயினு நிறைப்பெய ரியல. இது மேலதற்கோர் புறனடை, (இ-ஸ்) செய்யுளகத்துச் சொற்கள் குறைக்கப்பட்டன வாயினும் அவை பொருளுணர்த்துமிடத்து நிறைந்து நின்ற பெயரின் இயல்புடையனவாம். எ-று. என்றது, முற்கூறிய உதாரணங்கள் மரை, ஒதி, நீல் எனக் குறைக்கப்பட்டனவாயினும் முறையே தாமரை, ஓந்தி, நீலம் என நிறைந்த பெயர்களின் பொருள்களைத் தந்தே நிற்றல் காணலாம். இவ்வாறு செய்யுளிற் குறைக்கப்படுவன பெயரே யாகலின் நிறைப்பெயரியல. என்ருர் . சடுடு. இடைச் சொல்லெல்லாம் வேற்றுமைச் சொல்லே . இஃது இடைச்சொற்கண் எஞ்சி நின்றதோர் பொருளுணர்ச்சி கூறுகின்றது. (இ-ள்) இடைச்சொற்கள் எல்லாம் தாம் அடைந்த பெயர் வினேகளின் பொருள்கரே வேறுபடுத்தி நிற்றலின் வேற்றுமைச்