பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 ஞாயிறு, திங்கள், தீ என ஒவ்வொன்றற்கே யுரியவாய் வழங் கும் பெயரொடு அப்பொருளின் கண் அமைந்த செம்மை, வெண்மை, வெம்மையாகிய பண்பினை அடைமொழியாகக் கூட்டிச் செஞ்ஞாயிறு, வெண்டிங்கள், வெவ்வழல் என வழங்கு தல் முற்குறித்த ஞாயிறு, திங்கள், தீயின் வேருகக் கருஞாயிறும் கருந் திங்களும் தண்ணழலும் உளவாகச் சுட்டாமையின் அவை இனச்சுட்டில்லாப் பண்புகொள் பெயராயின. இங்ங்னம் இனஞ் சுட்டாத பண்பினை அடைமொழியாகப் பெற்ற பெயர்கள் செய்யுள்நெறியிலன்றி வழக்குநெறியில் வழங்கப் பெறுதல் இல்லை என்பது இந்நூற்பாவில் அறிவுறுத்தப்படும் விதியாகும். (உ-ம்) செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும் வெண்டிங்களுள் வெயில் வேண்டினும்: (புறம்38:7-8) என இனச் சுட்டில்லாப் பண்பு கொள் பெயர் செய்யுளில் வழங்கப் பெறுதல் காணலாம். பண்பினே அடைமொழியாகக் கொள்ளாது, வடவேங்கடம் - தென்குமரி, முட்டாழை, கோட் சுரு எனத்திசையும் உறுப்பும் தொழிலுமுதலாய அடையடுத்து இனஞ்சுட்டாது வருவன ஒன்றென முடித்த லென்பதனுற் செய்யுளாறென அமைத்துக் கொள்ளப்படும் எனவும், பண்பு கொள் பெயர் இனங்குறித்து வருதல் மரபு; அம்மரபு வழக்கின் கண் வழுவற்க என்றும் செய்யுட்கண் வழுவமைக்கவென்றும் காத்தவாருயிற்று’ எனவும் இச்சூத்திரப் பொருளே விளக்குவர் சேவைரையர். இனி, ஒருவன் சொல்லுவது; வழக்காறல்ல என்பதனை 'வழக்காற்றின் அல்ல’ என ஐந்தாமுருபு விரித்து, அல்ல: என்பதனைப் பெயர்ப்படுத்துக் கூறும்; கூறவே, வழக்கிற்கும் இனமில் பண்புகொள் பெயர்கள் உள என்பது போந்ததாம் : எனப் பிறர் கூறும் ஒர் உரையினைக் குறித்து, பெருங் கொற்றன், பெருங்கூத்தன் என்பன போல்வன, வழக்கிடைப் பண்புப் பெயர் வருங்கால் குணமின்றி விழுமிதாகச் சொல்லு தற்கு வந்து நிற்கும்.’’ என எடுத்துக் காட்டுத் தந்து