பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 (உ-ம்) சுமந்தான் விழுந்தான், புதுப் புனல் வந்தது, இருள் புலர்ந்தது என்பன, சுமக்கப்பட்டது விழுந்தது, மழை பெய்தது, சுடர் தோன்றிற்று என முறையே விளக்கினவாறு காண்க: என்பர் மயிலேநாதர். இனி, பாவஞ் செய்தான் நரகம் புகும்? என்ற துணையானே புண்ணியஞ் செய்தான் சுவர்க்கம் புகும் என இனத்தைத் தருதலே யன்றி, அவன் இது செய்யின் இது வரும் என்னும் அறிவிலி என்னும் இன மல்லதனையும் தந்தது. மேலே ச் சேரிச் சேவல் அலேத்தது என்ற துணையானே கீழைச் சேரிச் சேவல் அகலப்புண்டது என இனத்தைத் தருதலேயன்றி அச்சேவலுடையார்க்கு வெற்றியாயிற்று என இச்சூத்திரத்திற்குச் சங்கர நமச்சி வாயர் கூறும் மற்ருெரு விளக்கமும் இங்கு நினைக்கத் தகுவதாகும். 'விதந்த மொழியினம் வேறுஞ் செப்பும்: என்ருர் பரிமாணனர். ல்கூ. இயற்கைப் பொருளே யிற்றெனக் கிளத்தல். இயற்கைப் பொருள்மேல் சொல் நிகழுமாறு உணர்த்து கின்றது. (இ~ள்) - (தன்னியல்பில் திரியாது) இயல்பாகி வாரா நின்ற பொருளே (அதன் இயல்பு கூறுங்கால் ஆக்கமும் கார ணமுங் கொடாது) இத்தன்மைத்து என்று சொல்லுக எ-று. இயல்பாவது பொருட்குப் பின் தோன்ருது உடனிகழுந் தன்மை . (உ-ம்) நிலம் வலிது, நீர் தண்ணிது, தீ வெய்து, வளி உளரும், உயிர் உணரும் எனவரும். இற்று? என்பது வினைக்குறிப்பு வாய்பாடாயினும் உளரும் உணரும் என்னும் தெரிநிலேவினையும் இற்று” என்னும் பொருள்பட வருதலின், இற்றெனக் கிளத்தலேயாம்."