பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 (உ-ம்)இளம் பெருங்கூத்தன் எனவரும் வழக்கினுள் . சிறுபைந்துவிச் செங்காற்பேடை எனவரும் செய்யுட் கண். இளம்பெருங் கூத்தன் என்றக்கால் இளமை.பெருமையை நோக்கி நின்றதன்று, கூத்தன் என்னும் பெயரையே நோக்கி நின்றதெனவுணர்க?? என்பர் இளம்பூரணர். இச்சூத்திரப் பொரு ளேயும் இவ்வுரை விளக்கத்தையும் அடியொற்றியமைந்தது, 402. அடைசினே முதல்முறை யடைதலும், ஈரடை முதலோ டாதலும் வழக்கியல்; ஈரடை சினேயொடு செறிதலும் மயங்கலுஞ் செய்யுட்கே. என வரும் நன்னூற் சூத்திரமாகும். ஒன்றைச் சொல்லுங்கால், அடை, சினை, முதல் எனக் கிடந்த முறையே சொல்லுதலும், இரண்டு அடையை முத லுடனே சேர்த்துச் சொல்லுதலும் வழக்கினுள் இயல்பாம்; இரண்டு அடையைச் சினேயொடு சேர்த்துச் சொல்லுதலும், வேண்டியவாறு மயங்கச் சொல்லுதலும் செய்யுட்கண் இயல் பாம்: என்பது இதன் பொருளாகும். (உ-ம்) பெருந்தலைச் சாத்தன், செங்கால் நாரை, நெட் டிலேத் தெங்கு எனவும், இளம் பெரு வழுதி, சிறுகருங் காக்கை எனவும் வழக்கினுள் வந்தவாறு. 'சிறு பைந்துாவி யிற் செயிரறச் செய்த 9, 'கரு நெடுங்கண் தருங்காம நோயே. எனவும், பெருந் தோட் சிறு மருங்குற் பேரமர்க் கட் பேதை?? எனவும் செய்யுளுள் மயங்கி வந்தன. இவற்றுள் அடைசினை முதல் முறையடைதலொன்றும் வழுவற்க எனக் காத்தலும் ஏனைய மூன்றும் அவ்வாறு நில்லாமையின் வழுவ மைதியும் ஆகும். உள். ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி கிைய வுயர் சொற் கிளவி இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல. இது, வழிஇ யமையுமாறு உணர்த்துகின்றது.