பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 யாவன், யாவள், யாவர், யா, யாவை, யாண்டு, யாங்கு என்பன திணையும் பாலும் இடமும் முதலாகிய சிறப்புவகை யாலும் சிறிதறியப்பட்ட பொருளன வாதலின், அவற்றைக் கூருது, வழக்கினுள் பொதுவகையால் அறியாப் பொருள்வயின் விவைாய் வரும் யாது எவன் என்னும் இவ்விரண்டினேயே இங்கு எடுத்தோதினர் ஆசிரியர். கூஉ. அவற்றுள் யாதென வரூஉம் வினவின் கிளவி அறிந்த பொருள்வயின் ஐயந்தீர்தற்குத் தெரிந்த கிளவி யாகலு. முரித்தே. இஃது இறந்தது காத்தல் நுதலிற்று. (இ-ள்) மேற்குறித்த அவ்விரு சொற்களுள் யாது என்பது அறியப்பட்ட பொருட்கண் தோன்றிய ஐயத்தினை நீக்குதற்கு ஆராய்ந்த சொல்லாதலும் உரித்து எ-று. அறிந்த பொருள்பொதுவகையானன்றிச் சிறப்பு வகையாலும் அறியப்பட்ட பொருள். (உ-ம்) நம் எருதைந்தனுள் யாது கெட்டது? எனவரும். உம்மை-எதிர்மறை அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றுதலே பெருவழக்கு என்பதாம். யாது எவன் என்னும் விச்ை சொற்களே ஆளுதல் பற்றிய இவ்விதி, சுருக்க நூலாதல்பற்றி நன்னூலில் இடம்பெற்றிலது. கடங் இனத்தென வறிந்த சினே முதற் கிளவிக்கு வினேப்படு தொகுதியின் உம்மை வேண்டும். இது, வரையறையுடையது தொகை பெறுங்கால் வருவதோர் மரபு கூறுகின்றது. (இ.ஸ்) (கேட்போரால்) இத்துணையென்று அறியப்பட்ட சினேக் கிளவிக்கும் முதற் கிளவிக்கும் வினைப்படு தொகுதிக்கண் உம்மை கொடுத்துச் சொல்லுக. எ-று.