பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 அணிந்தார், மெய்ப்படுத்தினர் எனவும், இயம் இயம்பினர், படுத்தார் எனவும், படை வழங்கினர், தொட்டார் எனவும் பொதுவினையாற் கூறுக என்பதாம். இவ்வாறன்றி அடிசில் தின்ருர், பருகினர்; அணி கவித்தார், பூண்டார் என ஒரு சார்க்குரிய வேறு வினையாற் சொல்லின் மரபு வழுவாம் ஆதலின் இச்சூத்திரத்தால் மரபு வழ்ாமைக் காத்தவாறு. சன். எண்ணுங் காலு மதுவதன் மரபே. இதுவும் அது. (இ.ஸ்) வேறுவினைப் பொருள்களைப் பொதுச்சொல்லாற் கூருது பிரித்து எண்ணுமிடத்தும் அதன் இலக்கணம் வேறு வினையாற்கிளவாது பொதுவினையாற்கிளத்தலே யாம். எ-று. எண்ணுங்காலும் அதன் மரபு அது என இயையும். (உ-ம்) சோறும் கறியும் உண்டார்; யாழுங் குழலும் இயம் பினர் எனவரும் . இவ்விரு சூத்திரப் பொருளையும் தழுவியமைந்தது, 888. வேறுவினப் பல்பொருள் தழுவிய பொதுச்சொலும் வேறவற் றெண்ணுமோர் பொதுவினை வேண்டும். என வரும் நன்னூற் சூத்திரமாகும். வெவ்வேறு வினைகட்குரிய பல பொருள்களையும் தழுவி நிற்கும் ஓர் பொதுச்சொல்லும், அவற்றின் சிறப்புச் சொற்களாய் எண்ணப்பட்டு நிற்கும் பல சொல்லும் ஒன்றற்குரிய சிறப்புவினை வேண்டாது எல்லாவற்றிற் கும் உரியதோர் பொது வினை வேண்டுவனவாம். என்பது இதன் பொருள். உதாரணம் மேற்காட்டப்பட்டன. ச.அ. இரட்டைக் கிளவி யிரட்டிற் பிரிந் திசையா. இதுவும் அது. (இ-ள்) இரட்டித்து நின்று பொருளுணர்த்துஞ் சொற்கள் இரட்டித்து நிற்றலிற் பிரிந்து நில்லா எ.று.