பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சடு. வியங்கோ ளெண்ணுப்பெயர் திணைவிரவு வரையார் இது தினேவழு அமைக்கின்றது. (இ-ள்) வியங்கோளொடு தொடரும் எண்ணுப்பெயர் திணை விராய் வருதலே நீக்கார் (ஆசிரியர்). இங்கு எண்ணுப் பெயர் என்றது தொகைபெற்றே வரும் எண்ணல்லாத உம்மையெண்ணும் எனவென் எண்ணும் எனக் கொள்வர் இளம்பூரணர். (உ-ம்) ஆவும் ஆயனும் செல்க எனவரும். செல்க என்னும் வியங்கோள் இருதிணையினையும் முடித்தற்குரிய பொது வினையாய் வழுவற்றதாயினும் ஆவாகிய அஃறிணை செல்க என்னும் ஏவற் ருெழிலே முற்றமுடியாமை கருதி வழுவமைத்தார் என்பர் நச்சிர்ைக்கினியர். இவ்விதி நன்னூலிற் கூறப்பெற்றிலது. சசு, வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினே கிள வார். இது மரபு வழுக் காக்கின்றது. (இ-ள்) வேறுபட்ட பல வினையினையுடைய பல பொருட் குப் பொதுவாகிய பெயரை ஒரு வினையாற்கூறர். எனவே அவற்றையுள்ளடக்கி நிற்கும் பொதுவினையாற் கூறுவர் என்ற வாரும். வேறு வினைப் பொதுச் சொல்லா வன வேறுவேறு வினே களேயுடைய பல பொருட்கும் பொதுவாயமைந்த அடிசில், அணிகலம், இயம், படை முதலிய பொதுச் சொற்கள். அடிசில் என்பது உண்பன தின்பன பருகுவன நக்குவன என்னும் நால் வகை வினைக்கும், அணியென்பது கவிப்பன கட்டுவன செறிப் பன பூண்பன என்னுந் தொடக்கத்தன வற்றிற்கும், இயம் என் பது கொட்டுவன ஊதுவன எழுப்புவன என்னுந் தொடக்கத்தன வற்றிற்கும், படை என்பது எய்வன எறிவன வெட்டுவன குத்து சில் வென்னுந் தொடக்கத்தனவற்றிற்கும் பொதுவாகலின் அவ்வாறே அடிசில் அயின்ருர், மிசைந்தார் எனவும் அணி