பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 ஒருமையெண்ணினேயுணர்த்தும் பொது என்றது, உயர் தினேக்கண் ஆணுெருமையினையும் பொண்னெருமையினையும் உணர்த்துவதாய், அவ்விருபாற்கும் பொதுவாய் நின்ற ஒருவர் என்னும் சொல்லின் அர் விகுதி. பொதுப்பிரி பாற்சொல் என்றது ஒருவர் எனப் பலர்பாற்குரிய அர். ஈற்றதாய் நின்ற அப்பொதுமையினின்றும் பிரிந்து ஒருவன் என ஆண்பாலேயும் ஒருத்தி எனப் பெண்பாலேயும் சுட்டி நிற்கும் அன் விகுதியி அனயும் இகர விகுதியினையும். பொதுப்பிரி பாற்சொல்லாகிய இவற்றின் பாலுணர்த்தும் ஈறுகள் ஒருமைக்கண்ணல்லது இருமை முதலிய எண்ணுமுறைக்கண் நில்லா எனவே, பொதுப்பிரியாப் பாற் சொல்லாகிய ஒருவர் என்பதன் பாலுணர்த்தும் ஈருகிய அர் விகுதி இருவர்மூவர் என எண்ணு முறைக்கண் நிற்கும் என்பதாம். மகன், மகள் என்னுந் தொடக்கத்துப் பெயர்ப் பொதுப் பிரி பாற்சொல்லின் நீக்குதற்கு ஒருமையெண்ணின்' என்றும், ஒருவர் ஒன்று என்பனவற்றின் நீக்குதற்குப் பொதுப்பிரிபாற் சொல் என்றும் அடைபுணர்த்தோதினர். ஒருவன், ஒருத்தி என்பன ஒருவர் என்னும் ஆண்மைப் பெண்மைப் பொதுவி னின்றும் பிரிந்து நின்று ஆண்பாலேயும் பெண்பாலேயும் வரைந் துணர்த்துவன வாதலின் அவை பொதுப்பிரிபாற் சொல்லாயின. பொதுப்பிரிபாற்சொல்’ எனச் சொல் என்னும் ஒற்றுமையால் நில்லாது என ஒருமையாற் கூறிஞர். ஒருவன் ஒருத்தி என ஒருமைக்கண் நிற்றலும், இருவன், மூவன், இருத்தி, முத்தியென எண்ணு முறைக்கண் நில்லாமை யும் கண்டு கொள்க: 2 என்ருர் சேவை ைரயர். இச்சூத்திரப் பொருளேத் தெளிய விளக்கும் முறையில் அமைந்தது, 287. ஒருவ ைெருத்திப் பெயர்மே லெண்ணில. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். ஒன்றென முடித்தல் என்பதல்ை ஒருவேன், ஒருவை என்னுந் தன்மை முன்னிலையீறும் எண்ணுமுறை நில்லாமை கொள்க.