பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔4 தன்மையாகிய உயர்திணையைச் சார்த்தி எண்ணப்படும் அஃறிணைச் சொல்லும் தன்மையாகிய உயர்திணே முடிபுபெறும் எனத் தொல்காப்பியர் கூறிய இவ்வழுவமைதி, தன்மைச் சொல் இருதினேப் பொதுச் சொல்லாய் மாறிய தம் காலத்திற்கு இன்றியமையாததன்று எனக் கருதிய பவணந்தியார்,உயர்திணை யைச் சார்ந்துவரும் பொருள் இடம் காலம் சினே குணம் தொழில் பற்றிய அஃறிணைச் சொற்கள் உயர்திணையொடு சார்த்தி யுரைக்குங்கால் உயர்திணை முடியினவாய் வழங்கும் பிற்காலத்து வழக்கினை அமைத்துக் கொள்ளும் முறையில், 876. உயர் திணை தொடர்ந்த பொருண் முதலாறும் அதளுெடு சார்த்தின் அத்தினே முடியின. எனச் சூத்திரஞ் செய்தார். 'உயர்திணையைச் சார்ந்து வரும் பொருளாதியாறும் அவ் வுயர்தினேயொடு சார்த்தி முடிப்பின் உயர்திணை முடியினவாம்?? என்பது இதன் பொருள். (உ-ம்) நம்பி பென்பெரியன், நாடு பெரியன், வாழ்நாள் பெரியன், கண்பெரியன், குடிமை நல்லன், செலவு நல்லன் என உயர்திணே சார்ந்த பொருளாதியாறும் உயர்திணைமுடிபு பெற்றன. இவ்வாறு உயர்தினையைச் சார்த்தாது தனித்துக் கூறும் வழி, நம்பிக்குப் பொன் பெரிது, நாடு பெரிது, வாழ் நாள் பெரிது, கண் பெரிது, குடிமை நன்று, செலவு நன்று எனத் தமக்குரிய அஃறிணை முடிபே பெறும் என்பதாம். சச. ஒருமை யெண்ணின் பொதுப்பிரி பாற்சொல் ஒருமைக் கல்ல தெண்ணுமுறை நில்லாது. இது மரபு வழுக் காக்கின்றது. (இ.கள்) ஒருமையெண்ணினே யுணர்த்தும் பொதுமையி னின்றும் பிரிந்த பாற் சொற்களாகிய ஒருவன் ஒருத்தி என்னும் சொற்கள் இருமை முதலாகிய எண்ணு முறைக்கண் நில்லா. எ று ,