பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 (உ-ம்) சுரு சுருத்தது; மொடு மொடுத்தது என இசை பற்றியும், கொறு கொறுத்தார்; மொறு மொறுத்தார் எனக் குறிப்புப்பற்றியும், குறுகுறுத்தது; கறுகறுத்தது எனப் பண்பு பற்றியும் இரட்டித்து வந்தன பிரிந்து நில்லாமை கண்டுகொள்க. கறுத்தது கறுத்தது; குறுத்தது குறுத்தது என்ருங்குச் சொல் முழுதும் வாராமையின் இவை அடுக்குத் தொடரன்மை யறிக . ஈண்டு இரட்டைக்கிளவி என்றது, மக்களிரட்டை விலங்கி ரட்டை போல வேற்றுமையுடையன வற்றையன்றி இலேயி ரட்டையும் பூவிரட்டையும் போல ஒற்றுமையும் வேற்றுமையு முடையனவற்றை என விளக்கம் தருவர் சேனவரையர். இரட்டித்து நின்று பொருளுணர்த்துவனவற்றைப் பிரித்து வழங்கல் மரபன்மையின், மரபு வழுக்காத்தவாறு . இந்நூற் و له لاة 5 rئس 395, இரட்டைக் கிளவி யிரட்டிற்பிரிந் திசையா. என இவ்வாறே எடுத்தாளுவர் பவணந்தி முனிவர். ச.கூ. ஒருபெயர்ப் பொதுச்சொ லுள் பொரு ளொழியத் தெரிபு வேறு கிளத்தல் தலைமையும் பன்மையும் உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும். இதுவும் அது. (இ - ள்) உயர்திணைக் கண்ணும் அஃறிணைக் கண்ணும் ஒரு பெயர்ப்பட நின்ற பொதுச் சொற்களைச் சொல்லுங்கால், அங்குள்ள பொருளெல்லாம் எடுத்துச் சொல்லாது, தலேமையும் பன்மையும் பற்றி (அவற்றுள் ஒன்றை)த் தெரிந்து கொண்டு வேருகச் சொல்லுக , எ று. சேரி என்பது பல குடும்பத்தார் சேர்ந்து வாழும் இடம் , ஆயினும் அங்குப் பார்ப்பனக்குடிகள் சில முதன்மைபெற்று விளங்குதல் பற்றி அதனைப் பார்ப்பனச் சேரி என வழங்குவர். இது தலைமை பற்றிய வழக் கெனப்படும். இனி அங்குப் பெரும் பான்மையராக வாழ்வோர் வடுகராதல் பற்றி அதனை வடுகச் சேரி என வழங்குதல் உண்டு. இது பன்மை பற்றிய வழக் கெனப்படும்.