பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனுர், எம். ஏ., பிஎச் டி. அவர்கள் அளித்த அணிந்துரை தொல்காப்பியம்-நன்னூல் ஆகிய இலக்கண நூல் கள் இரண்டனுக்கு முன்னும் இடையிலும் பின்னும் வேறு இலக்கண நூல்கள் இருந்தன. எனினும், கற்ருர் போற்றும் சிறப்புடையனவாய் இன்றுவரை விளங்குவன இவ்விரண் டுமே ஆகும். இவற்றைப் பயில்வோர் இரண்டன் அமைப் பையும் ஒப்புநோக்கிச் சீர்தூக்க விழைதல் இயல்பு. தொல் காப்பியத்தையும் அதன் உரையையும் ஒட்டியே பவணந் தியார், நன்னூல இயற்றினர் என்பதில் ஐயமில்ல. ஆயி னும், எவ்வெவ்வகையில் பவனந்தியார் தொல்காப்பியத் தையும் உரையையும் போற்றியுள்ளார் என்பதையும் எவ் வெவ்விடங்களில் மாற்றியுள்ளார் என்பதையும் உணர்தல் ஆராய்ச்சியாளர்க்குக் கடமையாகின்றது. அண்மைலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை அறிஞர் திரு க. வெள்ளே வாரணர் இரு நூல்களையும் ஒப்பிட்டு நல்ல பல விளக்கங்களையும், குறிப்புகளையும் சேர்த்து இந் நூலே, தொல்காப்பியம் - நன்னூல் - சொல்லதிகாரம்? என்ற தலைப்பில் இயற்றித் தந்துள்ளார். மேற்குறித்த ஆராய்ச்சிக்கு இந்நூல் பேருதவி புரிவதாகும். தொல்காப் பியத்தில் அமைந்துள்ள முறைப்படி இயல்களையும், நூற் பாக்களேயும் தந்து, அவற்றிற்கு உரிய நன்னூலின் நூற்