பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 முரித்து எனப் பொருள் கொண்டு அறஞ் செய்தான் துறக்கம் புகும் எனவும், இழிவறிந் துண்பான்கண் இன்பமெய் தும் எனவும் வரும் இவை, சொல்லுவார்க்கு இனப்பொருளியல் புரைக்கும் குறிப்பு உள்வழி, மறஞ் செய்தா ன் துறக்கம் புகான், கழிபேரிரையான் இன்பம் எய்தான் என இனஞ்செப்புதலும், அக்குறிப்பு இல்வழி இனஞ்செப்பாமையும் கண்டுகொள்க: என உதாரணங்காட்டி விளக்குவர் சேவைரையர். எடுத்த பொருளே உணர்த்து மொழியை எடுத்தமொழி என்ருர். இனன் அல்லாத பொருளின் நீக்குதற்கு இனம் என்ருர், இந் நூற்பா கூறும் விதி வடநூலார் கூறும் அருத்தாபத்தி பினே ஒத்ததாகும் என்பது இளம்பூரணர் நச்சினர்க்கினியராகிய உரையாசிரியர்களின் கருத்தாகும். அருத்தாபத்தி என்பது தன்னேடு மறுதலேப்பட்டு நிற்பது ஒன்ருக உள்வழியே இனஞ் செப்பும், பல உள்வழி இனஞ்செப்பாது . எடுத்துக்காட்டாக அறஞ்செய்தான் துறக்கம்புகும் என்றவழி அறத்திற்கு மறுதலே * மறம். ஒன்றேயாதலின் மறஞ்செய்தான் துறக்கம் புகான்என்பது இனமாகப் பெறப்பட்டது. ஆ வாழ்க’ என்புழி ஆவிற்கு மறுதலே எருமை ஒட்டகம் எனப் பலவுள. அந்தனர் வாழ்க’ என்புழி அந்தணர்க்கு மறுதலே அரசர் வணிகர் வேளாளர் எனப்பலரும் உளர், அங்ங்னம் பல மறுதலே உள் வழி இனஞ் செப்பாது என நச்சினுர்க்கினியர் தரும் விளக்கம் இங்குக் கூர்ந்துணரத் தகுவதாகும். இன்னும் இச்சூத்திரத்தின்கண் இனஞ்செப்பலும் உரித்து: என்றதஞலே இனமல்லாதன செப்பலும் உரித்து என்று கொண்டு, சுமந்தான் வீழ்ந்தான் என்றவழி, சுமவாதான் வீழ்ந்திலன் என்னும் பொருள் படுதலேயன்றிச் சுமக்கப்பட்ட தும் வீழ்ந்தது என (இனமல்லாதது) செப்பியவாறுங் கண்டு கொள்க: என்பர் தெய்வச்சிலையார். எடுத்த மொழியினஞ் செப்பலுமுரித்தே' எனவரும் இத் தொல்காப்பிய நூற்பாவை அடியொற்றியமைந்தது, 401. அடைமொழி யினமல்லதுந் தரும் ஆண்டுறின்.