பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்தினையியல் நூற்பா-டு so of

கூறலும் மிகைபடக் கூறலும் ஆயவாறு எடுத்துக் காட்டின் பெருகுமாதலான் உய்த்துணர்ந்து கண்டு கொள்க’ எனப் பன்னிரு படலமுடையார் புதியனவாக வகுத்துக்கொண்ட சில துறைகளின் அமைப்பினை மறுத்துரைப்பர் இளம்பூரணர்.

6. வஞ்சி தானே முல்லையது புறனே

எஞ்சா ‘மண் நசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல் குறித் தன்றே.

-

இளம் : இது வஞ்சித்திணையாமாறு உணர்த்துதல் நுத லிற் று.

(இ-ள் ) வஞ்சி முல்லையது புறன் - வஞ்சியாகிய புறத்திணை முல்லையாகிய அகத்திணைக்குப் புறனாம், எஞ்சா மண்நசை வேந் தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல் குறித்தன்று - அஃது ஒழியாத மண்ணை நச்சுதலையுடைய வேந்தனை மற்றொரு வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல் குறித்தது.

ஒழியாத மண்ணை நச்சுதலாவது, வேண்டிய அரசர்க்குக் கொடாமை. "அகத்திணை மருங்கின் அரில் தப உணர்ந்தோர், புறத்திணை இலக்கணம் திறப்படக்கிளப்பின்’ (புறத். கi என்பத னைக்கொணர்ந்து உரைத்துக் கொள்க. இவ்வுரை இனி வருகின்ற திணைக்கும் ஒக்கும். அதற்கு இது புறனாகியவாறு என்னை யெனின், மாயோன் மேய காடுறை யுலகமும்' (அகத். டு) கார் காலமும் முல்லைக்கு முதற்பொருளாதலானும், பகைவயிற் சேற லாகிய வஞ்சிக்கு நிழலும் நீருமுள்ள காலம் வேண்டுதலானும் பருமரக் காடாகிய மலைசார்ந்த இடம் ஆகாமையானும் அதற்கு இது சிறந்ததென்க. அன்னவுரைகள் முல்லைப்பாட்டினுள்,

  • எஞ்சா............ தன்றே?’ என்பது முடியத் தனிச் சூத்திரம் ஆக்குவர். (நச்சி.) (ar)

1. புறத்திணை ஏழினுள் ஒன்றாகிய வெட்சித்திணை யின் இலக்கணம் கூறு மிடத்து அகத்தினை மருங்கின் அரில் தப வுணர்ந்தோர், புறத்திணை யிலக் கணம் திறப்படக் கிளப்பின்: எனத் தோற்றுவாய் செய்து கொள்ளும் முறையில் அமைந்த தொடரை, ஏனைய வஞ்சித்திணை முதலியவற்றின் இலக்கணங் கூறு மிடத்தும் தோற்றுவாயாக இணைத்துக்கொள்ளுதல் வேண்டும் என்பார், கொணர்ந்து உரை த்துக் கொள்க’ எனவும் இவ்வுரை இனிவருகின்ற திணைக் கும் ஒக்கும்’ எனவும் கூறினார் இளம்பூச னர்.

2. முல்லை என்னும் அகத்தினைக்குக் காடுறையுலகமும் கார்கால மும் முதற் பொருளாதல் போல, பகை வயிற்சேறலாகிய வஞ்சித்தினைக்கு நீரும் திமு லும் உள்ள காலம் வேண்டுதலானும், காடுறையுலக கியமுல்லை நிலப்பகுதி பொருத்தமுடையதாதலானும் பருமரக்காடாகிய மலைசார்ந்த குறிஞ்சி நிலப்பகுதி அதற் த ரிய இடம் ஆகாமையாலும் முல்லைக்கு வஞ்சி புறனாயிற்று கான்பதாம்.