பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா-எ கனே

பார்க்கு அவை மேற்செலவின்கண் அடங்காமையிற் பாடாண் டிணை யெனப்படு மென்றுரைக்க."

இனி மேற்செல்வான் மீண்டு வந்து பரிசில் தருமென்றல் வேத்திய லென்றாகலிற் பரிசிலர்க்குக் கொடுத்தலும் படைக்கல முதலியவற்றோடு கூறினார்.

இனிக் கடிமரந்தடிதலும், களிறும் மாவுந் துறைப்படிவன வற்றைக் கோறலும், புறஞ்சேரியைச் சுடுதலும் முதலியனவும் அடுத்துார்ந்தட்ட கொற்றத்தின்பாற்படும். அவை கருவூரிடைச் சேரமான் யானையை யெறிந்தாற் போல்வன."

இனிப் புண்பட்டோரை முன்னர்ச்செய்த படைவலங்கூறி அரசராயினும் உழையராயினும் புகழ்வனபோல்வனவுந் தழிஞ்சிப் பாற்படும். இதனை முதுமொழிவஞ்சி' என்பர்.’’ ஆண்டுக் கொடுத்தல் முற்கூறிய கொடையாம். இத்தழிஞ்சியை அழியுநர் புறக்கொடை அயில்வாளோச்சாக்-கழிதறு கண்மை (புற-வெ. மாலை.வஞ்சி-உ0) யெனின், அஃது ஒருவன்றாங்கிய பெருமைப் பாற்படு மென்றுணர்க."

இச் சூத்திரத்து ஆன் எல்லாம் இடைச்சொல். இது செவ் வெண் உம்மை எண்ணினை இடையிட்டுக் கொண்டது.

21. புறநானூறு சசு, சஎ-ஆம் பாடல்களைத் துணை வஞ்சி என்று கூறுபவர் புறநானூற்றுரிையாசிரியர். இப்பாடல்கள் பகைவர் மேற் படையெடுத்துச் செல்லு தலாகிய வஞ்சித் திணையின் கண் அடங்காமையால் இப்பாடல்களைப் பாடான் தினையில் அடக்குதலே பொருத்தம் என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும்.

22. கருவூரிடைச் சேரமான் யானையையெறிந்தாற்போல்வன?’ என நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டும் வரலாற்றுக் குறிப்பு இதுவென விளங்க வில்லை. கருவூரிடை என்பது தகடுரி.ை என்றிருத்தல் வேண்டுமெனக் கொண்டு இந்நிகழ்ச்சி தகடுர் யாத்திரையிற் கூறப்படும் போரினைக் குறித்ததாக வும் கொள்ள இடமுண்டு.

23. இதனை முது மொழி வஞ்சி என்பவர் ஐயனாரிதனார். இத்துறையில் அமைந்த

குளிறுமுர சங் குணில் பாயக் கூடார் ஒளிறுவாள் வெள்ளம் உழக்கிக் - களிறெறிந்து புண்ணொடு வந்தான் புதல்வ ற்குப் பூங்கழலோய் தண்ன டை நல்கல் தகும் (பு. வெ. மா. சஅ) என்னும் வெண்பா தொல்காப்பியனார் குறித்த அழிபடை தட்டோர் தழிஞ்சி’ என்னுந் துறைக்கும் இலக்கியமாகக் கொள்ளும் முறையில் அம்ைந்துள்ள யை கூர்ந் துணசத் தகுவதாகும்.

24. அழிபடை தட்டோர் தழிஞ்சி’ என்னுந் தொல்காப்பியத் தொடர்க்கு, போரில் அழிந்து (தோற்றுப் புறங்கொடுத்து ஒடும் படை வீரர்கள் மேல் வாள் ஒச்சாது இரக்கத்தால் தழுவிக் கொள்ளுதல்’ எனப் பொருள் கொண்டு,

அழிகுநர் புறங்கொடை அயில் வாள் ஒச்சாக் கழிதறுகண்மை காதலித் துரைத்தன்று?