பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கக ஆசடு

அதற்கு இடம் காடும் மலையும் கழனியும் ஆகாமையானும், களரும் மணலும் பரந்த வெளி நிலத்துப் பொருதல் வேண்டு தலானும், அந்நிலம் கடல்சார்ந்த வழியல்லது இன்மையானும், நெய்தற்கு ஒதிய எற்பாடு போர்த்தொழிற்கு முடிவாதலானும் நெய்தற்குப் புறனாயிற்று. ('என்ப அசை.) (க.உ). நச்சர் :

ද් B- .

தும்பை தானே நெய்தலது புறனே.

இது தும்பைத்திணை அகத்திணையுள் இன்னதற்குப் புறனா மென்கின்றது. இதுவும் மைந்து பொருளாகப் பொருதலின் மண்ணிடை யீடாகப் பொரும் வஞ்சிக்கும் மதிலிடையீடாகப் பொரும் உழிஞைக்கும் பிற் கூறினார்."

(இபள்.) தும்பைதானே நெய்தலது புறனே-தும்பையென் னும் புறத்திணை நெய்தலெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாம் என்றவாறு.

தும்பை யென்பது சூடும் பூவினாற் பெற்ற பெயர். நெய்தற் குரிய பெருமனலுலகம்போலக் காடும் மலையுங் கழனியு மல்லாத களரும் மணலும் பொருகளமாக வேண்டுதலானும் பெரும் பொழுது வரைவின்மையானும், எற்பாடு போர்த்தொழில் முடியுங் காலமாதலானும், இரக்கமுந் தலைமகட்கே பெரும்பான்ம்ை உளதாயவாறுபோலக் கணவனை இழந்தார்க்கன்றி வீரர்க்கு இரக்கமின்மையானும், அவ் வீரக்குறிப்பின் அருள்பற்றி ஒருவர் ஒருவரை நோக்கிப் போரின்கண் இரங்குபு வாகலானும், ஒருவரும் ஒழியாமற் பட்டுழிக் கண்டோர் இரங்குப வாகலானும், பிற காரணங்களானும் நெய்தற்குப் தும்பை புறனாயிற்று." (கச)

ઠ a- (છ) மைந்துபொரு ளாக வந்த வேந்தனைச் சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் றென்ப,

1. பகைவர்மேற் படையொடு சென்று பொரும் போர் நெறியில் பகைவர் நாட்டு நிலவெல்லையை இடையீடாகக் கொண்டு நிகழும் போர் நிகழ்ச்சி வஞ்சித் திணை யெனப்படும் எனவும், பகைவரது மதிலரணினை இடையீடாகக் கொண்டு நிகழும் போர் நிகழ்ச்சி உழிஞைத் தி ைண எனப்படும் எனவும் நச்சினார்க்கினியர் கூறும் இவ்வேறுபாடு ஏற்புடையதாகும்.

2. நெய்தற்குரிய பெருமண லுலகம்போலக் களரும் மன லும் பொருகள மாதல், பெரும்பொழுது வரை வின்மை, நெய்தற்குரிய எற்பாடு போர்த்தொழில் முடியுங்காலமாதல், நெய்தலில் தலைமகட்கே இரக்கமுளதாய வாறுபோல ப் போரிற் கணவனை யிழந்த மனைவியர்க்கே இரக்கமுளதாதல், வீரர்க் குறி பின்

-11