பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கடு கனடு

மண் நாணப் புகழ்பரப்பியும் அருங்கடிப் பெருங்காலை விருந்துற்றதின் திருந்தேந்துநிலை என்றும், காண்கதில் அம்ம யாமே குடாஅது பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பின் பூவிரி புதுநீர்க் காவிரி புரக்குந் தண்புனல் படப்பை எம்மூர் ஆங்கண் உண்டுத் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம் செல்வல் அத்தை யானே செல்லாது மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக் கழைவளர் இமயம் போல நிலீஇயர் அத்தை நீ நிலமிசை யானே.” (புறம். கசு சு) வேட்பித்தலாவது, வேள்வி செய்வித்தல். 'நளிகடல்இருங் குட்டத்து’’ என்னும் புறப்பாட்டினுள்,

'ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை நான்மறை முதல்வர் சுற்றம் ஆக மன்னர் ஏவல் செய்ய மன்னிய வேள்வி முற்றிய வாள்வாய் வேந்தே' (புறம். உசு) என அரசன் வேட்பித்தவாறும், பார்ப்பார் வேட்டவாறும் கண்டு கொள்க.

ஈதலாவது, இல்லென இரந்தோர்க்குக் கொடுத்தல்.

உதாரணம் 'இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே உள.' (புறம். உ.உக.) ஏற்றலாவது, கோடல்; கொள்வோன் தனது சிறப்பிற் குன்றாமல் கோடல்.

உதாரணம் "இரவலர் புரவலை நீயும் அல்லை புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர் இாவலர் உண்மையும் காண்இனி இாவலர்க்கு ஈவோர் உண்மையும் காண் இனி நின்னூர்க் கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த நெடுதல் யானைனம் பரிசில்

கடுமான் தோன்றல் செல்வல் யானே, (புறம் கசு உ)