பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



தொல்காப்பியம்

பொருளதிகாரம்

புறத்திணை இயல்

இளம் பூ என ம் : இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், புறத்திணையியல் என்னும் பெயர்த்து. இது புறப்பொருள் உணர்த் துதலாற் பெற்ற பெயர். அஃது யாங்ங்ணம் உணர்த்தினாரோ எனின், மேல் அகத்திணையாகிய எழுதிணையும் சாற்றி, அவற்றின் புறத்து நிகழ்வன எழுதிணை உணர்த்தினார் என்று கொள்க. அவை :- மலையாகிய குறிஞ்சித்திணைப்புறம் நிரை கோடலும் நிரை மீட்டலும் என்னும் வேறுபாடு குறித்து வெட்சி எனவும் கரந்தை எனவும் இரண்டு குறி பெறுதலும், காடுறையுல் காகிய முல்லைப்புறம் மண்ணசை வேட்கையால் எடுத்துச் செலவு புரிந்த வேந்தன்மேல் அடல் குறித்துச் செலவு புரிதலான், அவ்விரு பெருவேந்தரும் ஒரு வினையாகிய செலவு புரிதலின் அது வஞ்சி என ஒரு குறி பெறுதலும், புனலுலகாகிய மருதத்துப்புறம் எயில்

1. ஒத்து-இயல்; நூற்பகுப்பாகிய அதிகாரத்தின் உட்பிரிவு. ஓதப்படு தலின் ஒத்து என்னும் பெயருடையதாயிற்று.

ஒத்த அன்பினராகிய ஒருவனும் ஒருத்தியும் பண்டைப் பிறப்பிற் பழகிய நல்லுழின் தூண்டுதலால் ஒரிடத்து எதிர்ப்பட்டுத் தம்முள் ஒருவரையொருவர் இன்றியமையாதவராக அன்பினால் உள் ளம் ஒன்றி வாழும் வாழ்க்கை அகத் திணை அல்லது அகவொழுக்கம் எனப்படும். அகத்திணை யின் பொதுவிலக் கணத்தினையுணர்த் துவது தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் முதல் இயலா கிய அகத்திணையியலாகும். இவ்வாறு அன் பினை வளர்க்கும் மனை வாழ்க்கை யினை மேற்கொண்ட குடும்பத்தினர் பல்லாயிரவர் சமுதாய அமைப்பாகிய பொது வாழ்க்கையிலும் அரசியல் ஆட்சியிலும் ஒத்த உரிமையும் கடமையும் உடையவ ராய்ப் பசியும் பிணியும் பகையும் இன்றி ஒத்து வாழும் நல்வாழ்வுக்கு அரண் செய்வது புறத் தினையொழுகலாறாகும்.

ஆசிரியர் தொல்காப்பியனார், எழுத் துஞ் சொல்லும் பொருளும் என வகுத் துக் கொண்ட முறையே பொருளதிகாரத்தின் முதற்கண் அகத்தினையின் பொதுவிலக்கணம் உணர்த்தி அதனையடுத் தடிைந்த புறத்திணையியலாகிய இவ்வியலில் புறத் திணை யின் பொதுவும் சிறப்புமாகிய இலக்கணங்களை விரித் துக் கூறுகின்றார். அதனால் இது புறத்தினையியல் என்னும் பெயருடைய

தாயிற்று.