பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ : தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

காத் தற்றொழிலன்றி அழித்தற்றொழில் பூண்ட முக்கட் கடவுட்குச் சூலவேல் படையாதலானும் முருகற்கு வேல் படை யாதலானுஞ் சான்றோர் வேற்படையே சிறப்பப் பெரும்பான்மை கூறலானும் வேலைக் கூறி ஏனைப்படைகளெல்லாம்,

“மொழிந்த பொருளோ டொன்ற வவ்வயின்

மொழியா ததனை யு முட்டின்று முடித்தல்'

(தொல்-பொ-செய்-ககo)

என்னும் உத்தியாற் பெறவைத்தார்.

அரும்பகை தாங்கும் ஆற்றலானும்-வெலற்கரும் பகைவர் மிகையை நன்கு மதியாது எதிரேற்றுக்கொள்ளும் அமைதி யானும்:

வாழ்க்கை புல்லா வல்லாண் பக்கமும்-உயிர்வாழ்க்கையைப் பொருந்தாத வலிய ஆண்பாலின் கூறுபாட்டானும்:

பக்கமென்றதனால் தாபதப்பக்கமல்லாத போர்த்தொழி லாகிய வல்லாண்மையே கொள்க.

ஒல்லார்”நாணப் பெரியவர்க் கண்ணிச் சொல்லிய வகையின் ஒன்றொடுபுணர்ந்து தொல்லுயிர் வழங்கிய அவிப்பலியானும்பகைவர் நானும்படியாக உயர்ந்தோரான் நன்குமதித்தலைக் கருதி இன்னது செய்யேனாயின் இன்னது செய்வலெனத் தான் கூறிய பகுதி யிரண்டனுள் ஒன்றனோடே பொருந்திப் பல பிறப் பினும் பழகிவருகின்ற உயிரை "அங்கியங்கடவுட்குக் கொடுத்த அவிப்பலியானும்:

நாணுதலாவது நம்மை அவன் செய்யாதே நாம் அவனை

அறப்போர் செய்யாது வஞ்சனையால் வென்றமையால் அவன் தன்னுயிரை அவிப்பலி கொடுத்தானென நாணுதல்.

(பாடம்) 4 வல்லானே?

5 அங்கி கடவுட் குக்

1. அரும்பகை-வெல்லுதற்கு அரிய பகைவர். தாங்குதல்-எதிர் ஏற்றுக் கொள்ளுதல்.

2. ஒல்லார் -பகைவர்.

3. கண்ணி-கருதி.