பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£2.É.-C தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவ ளம்

புகழைத்தரும் இடையீடில்லாத கொடைத்திறமும், தம்மிடத்துப் பிழை செய்தோரைப் பொறுக்கும் காவற்பகுதியும், மெய்ப்பொரு ளுடன் ஒன்றிச் சேர்ந்த பகுதியும், எவ்வுயிர்க்கும் அருளுடையராய் இருவகைப் பற்றுக்களையும் விட்டகன்ற துறவுநிலையும், என்று இரண்டு கூறுபட்ட ஒன்பது துறைகளையுடையது வாகைத்திணை) எ-று.

இருபாற்பட்ட ஒன்பதின் றுறைத்து’ எனவே பதினெட்டுத் துறைகளையுடைய தென்பதாம். இதன்கண் முன்னர்க் கூறப்பட்ட ஒன்பதும் மறத்துறை பற்றியும் பின்னர்க் கூறப்பட்ட ஒன்பதும் அறத்துறை பற்றியும் நிகழ்வன என்பார் இருபாற்பட்ட ஒன்பதின் துறைத்தே' என்றார் ஆசிரியர்.

18. காஞ்சி தானே பெருந்திணைப் புறனே

பாங்கருஞ் சிறப்பிற் பன்னெறி யானும்" நில்லா உலகம் புல்லிய நெறித்தே.

இளம் : இது, காஞ்சித்திணையாமாறு உணர்த்துதல் து.தலித் று.

(இ-ள்.) காஞ்சி பெருந்திணை புறன்-காஞ்சி என்னும் திணை பெருந்திணை என்னும் அகத்திணைக்குப் புறனாம்; பாங்கு அருஞ் சிறப்பின் பல் நெறியானும் நில்லா உலகம் புல்லிய நெறித்து-அது பாங்காதல் அரிய சிறப்பினாற் பவநெறியாயினும் நில்லாத உலகத் தைப் பொருந்திய நெறியை புடைத்து.

பாங்கருமையாவது, ஒருவற்கு ஒருதுணையாகாமை. நிலை யாமை மூவகைப்படும்.

இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலை யாமை என, இவற்றுள்,

இளமை நிலையாமை யாவது,

'பனிபடு சோலைப் பயன்மரம் எல்லாம் கணிஉதிர்ந்து வீழ்ந்தற் றிளமை-நனிபெரிதும் வேற்கண்ணள் என்றிவளை வெஃகல்மின் மற்றிவளும் கோற்கண்ணள் ஆகுங் குனிந்து' (நாலடி-இளமை. எ)

செல்வம் நிலையாமையாவது,

1. பாங்கு-துணை. புன்னெறியானும்-பல வழிகளாலும், 'பல்லாற்றானும்: எ ைபது கச்சினார்க்கி ஒளியூர் கொண்ட பாடம், -