பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம் تقی مس سنتی

திரண்டும் வரையறையின்மையானும், பெருந்திணைக்குக் காஞ்சி புறனாயிற்று.

(ہائی } ہی ھ கருத்து :- இது, காஞ்சித்திணையின் இயல் விளக்குகிறது.

பொருள் :- பாங்கருஞ் சிறப்பின்-ஒப்பற்ற மறுமையின்பத் துக்கு பல்லாற்றானும் நில்லாவுலகம் புல்லிய நெறித்தே-நிலை யற்ற உலகியலை யிகழும் முறையினை யுடையது (காஞ்சித் திணை)

குறிப்பு :- நெறித்துஎன்னும் வினைக்கேற்பக் கொண்ட பொருடொடர்பால் காஞ்சித்திணை என்னுமெழுவாய் சூத்திரத்தி லிருந்து கொள்ளப்பட்டது. பாங்கருமை-ஒப்பின்மை: சிறப்பு' வீடுபேறும் மறுமையின்பமாதல்; சிறப்பென்னும் செம்பொருள் காண்பதறிவு என்னுங் குறளானறிக. இன்னுருபு ஏதுப் பொருட்டு, பல்லாறு, யாக்கைநிலையாமை, இளமை நிலையாமை, செல்வ நிலையாமை போல்வன கூறுதலாம். மதுரைக்காஞ்சி இதற்கு எடுத்துக் காட்டாகும். இனி, இந்நூலில் இத்திணைக்கு வகுக்கும் துறைகளெல்லாம், உலகியலை இகழ்வதற்கு மாறாக, அதைத் தழுவியே அமைந்திருப்பதால், அதற்கேற்பப் பொருள் கூறுவாருமுளர். அவர் கூறும் பொருளாவது :- பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றானும்-முறை சிறவாத பல துறையானும்: நில்லா உலகம் புல்லிய நெறித்தே-நிலையற்ற உலகியலைத் தழுவியது காஞ்சித்திணை. இவ்வுரைக்கு, பாங்கு முறைப் பொருட்டாகும்; அருஞ்சிறப்பு அருங்கேடன் என்பது போலச்சிறவாமை குறிக்கும். இப்பொருளுக்கு இதையடுத்த சூத்திர உரையில் அவ்வத்துறைக்குக் காட்டும் பாட்டே போதியதாம்.

ஆய்வுரை

நூற்பா. க.அ. இது, காஞ்சித்திணையின் இலக்கணம் உணர்த்துகின்றது.

(இ-ள்) காஞ்சி என்னும் திணை பெருந்திணை என்னும் அகத் திணைக்குப் புறனாம். அதுதான் துணையாதலரியு சிறப்பினைப் பெறுதல் காரணமாகப் பலநெறியானும் நிலைபேறில்லாத உலகி யலைப் பற்றி நிற்கும் இயல்பினையுடையதாம். எ-று.

பாங்கு அரும் சிறப்பு-தனக்குத் துணை (ஒப்பு) இல்லாத சிறப்பு: என்றது தனக்கு ஒப்பில்லாத வீட்டின்பம் என்பர் நச்சி னார்க்கினியர். இங்குப் 'பாங்கு அருஞ்சிறப்பு என்றது, தனக்கு