பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கக .ே சக்

நல்லோள் கணவனொடு நளி அழல் புகீஇ இடையிட்ட மாலை சொல்நிலையும்’-கணவனொடு கிழத்தி பெரிய அழற் புகு வழி இடையிட்ட மாலைக்காலத்துக் கூறும் கூற்றும்.

அரும்பெருஞ் சிறப்பின் புதல்வன் பயந்த தாய் தப வரூஉம் தலைப்பெயல் நிலையும்-அரும்பெருஞ் சிறப்பினையுடைய மகற் பெற்ற தாய் சாதற்கண் அவனைத் தலைப்பெயல் நிலையும்.

{தலைப்பெயல்-சேர்தல்)

மலர்தலை உலகத்து மரபு நன்கு அறிய பலர் செல செல்லாக் காடு வாழ்த்தொடும்-இடம் அகன்ற உலகத்தின் மரபு நன்கு விளங்கப் பலரும் மாயத் தான் மாயாத புறங்காடு வாழ்த்து தலும்.

நிறை அருஞ்சிறப்பின் இரண்டு துறை உடைத்து - ஆக நிறையும் அருஞ்சிறப்பினையுடைய இரண்டு துறைகளையுடைத்து.

இச்சூத்திரத்தில் வந்த அத்தும் ஆனும் முறையே சாரியையும் இடைச் சொல்லுமாம்.) (ઠક્સ)

நச்சர் :

ఫ్రీ శ్రీశ్రీ

இது முற்கூறிய காஞ்சித்திணை வீடேதுவாகவன்றி வாளாது நிலையின்மை தோன்றக் கூறும்பகுதி கூறுகின்றது. இதுவும் வாகையைத் தொகுத்தோதிய பொதுச்சூத்திரம் போலத் துறை யொடும் படாது நிலையின்மைப்பொருளை வகுத்தோதிய சூத்திர மென்றுணர்க."

1. நல்லோள்-நற் குன தற்செய்கையினளாய மனைவி, நளிஅழல்செறிந்துள்ளியும் தீ. புஇே-புக்கு; செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சம் இங்குச் செயவென்னெச்சமாய்ப் புக’ எனப் பொருள் தந்து நின்றது.

சொல் இடையிடுதலாவது, தீப்பரயும் நிலையில் தன்செயலைத் தடுத்து நிற்கும் சான்றோர்க்கு இடையே மறுமொழி பகர்தல். கணவனோடு திம்ப்சயித் லாகிய இச்செயல் வெயில் தணிந்த மாலைக்காலத்து நிகழ்வதாதலின் மாலைநிலை இயனப் பெயர்பெற்றது, அரியபெருஞ் சிறப்பினையுடைய மகனைப் பெற்ற தாய், பெற்ற அப்பொழுதே இறக்கும் நிலையாக மகனையடைந்த நிலையும் என்பது இத் தொடரின் பொருளாகு என் து, பெருஞ்சிற்ப்புடைய மைந்தனைக் ႏိုင္တဲ့၊ யிர்த்த தாய் பொறையுயிர்த்த உடற்சோர்வினால் பிள்ளையைப் பெற்று அப்பொழுதே இறந்தொழிதலாகிய துயர்நிலையினை, தலைப்பெயனிலை என்னும் இதனைப்பொதுவியற்படலத்தில் சிறப்பிற்பொதுவியற்பால துறைகளுள் ஒன்றாக விரித்து விளக்கு வர் ஐயனாரிதனார்.

'மாய்பெருஞ்சிறப்பிற்புதல்கன் பெயர' எனப்பாடங்கொண்டு இத்துறைக்கு வேறொரு விளக்கம் கூறுவர் நச்சினார்க்கினியர்.

2. துறை இரண்டு என்றது, துறைத்தொகுதிகள் இரண்டு என்ற பொருளில் இங்கு ஆளப்பெற்றது.

3. இச்சூத்திரம், காஞ்சித்திணைக்குரிய வீடுபேறு ஏதுவாகவன்றிப் பொதுப் பட நிலையின் மைய்பொருளை வகுத்து ஒதுவது எனக் கருத்துரை பகர்வர் நச்சி ாைர்க்கினியர்.

ماسه i7 عسه