பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

குறிப்பு : ... "ஒடு" இரண்டில் முன்னது எண் குறிக்கும். பின்னது மூன்றாம் வேற்றுமையுருபு.

இதில், அடி இரண்டும் ஒரு சூத்திரமாயமைதல் பொருளடை வாற்றெளிவாகும். காலத்தால் முந்திய இளம்பூரணரும் அவ்வாறே கொள்ளுதலால், அதுவே பழைய பாடமாவது தேற்றம். இவற்றைப் பிரித்திருவேறு நூற்பாக்களாக்கிப் பொருந் தாப் புதுப்பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். தனித்துத் தன்னளவில் பின்னடி, முடிந்த பொருளுதவாமை வெளிப்படை. புறத்தினை அல்லது பாடாண் வகையனைத்திற்கும் பொதுவான புறனடை கூறுதல் கருத்தாயின், அவ்வகையனைத்துங் கூறியபின் னிறுதியிற் புறனடை கூறல் முறையாகும். இன்னும் இதன் பின்னும் பாடாண் வகை கூறுவதால் ஈண்டிது பொதுப்புறனடை

யாகாது.

அன்றியும் முதலடிக்கு இவர் கூறும் புதுப்பொருள் தமிழறமும் பழமரபும் அழியவரு மிழுக்காகும். ஊரிற் பொதுமகளிரொடு கூடிவந்த விளக்கமும் பாடாண் திணைக்குரித்து” எனக் கூசாது கூறுகிறார். பரத்தை ஒருத்தியேயன்றிப் பலரொடும் வாழ்வாரி ருக்கலாம். அன்னாரும் அவ்வாழ்வை நாணாமல் ஊரறியக்காட்டி அதைப் பாராட்டும் உயிரொழுக்கமாகக் கருதும் பேதைமைக் காளாகார். அவ்வளவு நாணற்ற கீழ்மக்கள் உளராயின் அவர் கயமையைப் பாடாண்திணைக்குரித் தெனப்புலவர் தலைவரான தொல்காப்பியர் கொள்ளார். அக்கயவர் வாழ்வு “வரைவிலா மாணிழையர் மென்தோள் அளறாழும் புரையிலாப் பூரியராம் திருநீக்கப்பட்டார் தொடர்பாக வெறுக்கப்படுவதே தமிழற மரபாயிருக்க அதைப் புலவர் புகழ்ந்து பாடும் பீடுசான்ற பாடாண் திணைப் பகுதியாக நச்சினார்க்கினியக் கூறத்துணிந்தது வியப் பாகும். அத்துணிவு அவர் மதித்த ஒரு சில பிற்காலப் போலிப் புலவர் செய்யுட்போக்கையும், அவர் காலக் கயவர் சிலர் வாழ்க் கையையும் நோக்கியவர் கொண்டார் போலும். சொற்றொடர் சுட்டும் செம்பொருளை விலக்குதற்கு அவர்கூறும் ஏதுக்கள் போதாமையும் வெளிப்படை. அதையுமா ராய்வோம்.

'இச்சூத்திரத்திற்குத் தலைவர் பிறந்த ஊரும் அவர் பிறப்பும் என்று பொருள் கூறின், (i) முன்னர் வண்ணப் பகுதி 8 என்ப தனால் பிறப்புப் பெறுதலானும். (2) மரபியற் கண்ணே ஊரும் பெயரும் என்னும் சூத்திரத்து ஊர் பெறுதலானும், இது கூறியது கூறலாமென்றுணர்க. இவ்விரண்டேதுக்களும் பொருளற்றன.