பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கூ0 磁一母°苏一

அவனும் அவன் கொடுத்த பெருவளனை உயர்த்துக்கூறி உலக வழக்கியலால் தோன்றும் இரண்டு வகைப்பட்ட விடையும்;

இருவகையாவன, தலைவன். தானே விடுத்தலும் பரிசிலன் தானே போகல் வேண்டுமெனக் கூறிவிடுத்தலுமாம்.

யரும்பட செவ்வ முழந்ததன் றலையே தென்பரவர் மிடல்சாய (புறம்-கடனஅ) இது தானே போவென விடுத்தபின் அவன் கொடுத்தவளனை உயர்த்துக் கூறியது.

'உயிர்ப்பிடம் பெறாஅ தூண்முனிந் தொருநாட் செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய செல்வ சேறுமெந் தொல் பதிப் பெயர்ந்தென மெல்லெனக் கிளந்தன மாக வல்லே யகறி ரோவெம் மாயம் விட்டெனச் சிதறிய வன்போற் செயிர்த்த நோக்கமொடு துடியடி யன்ன தூங்கு நடைக் குழவியொடு பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கெனத் தன்னறி யளவையிற் றாத்தா யானு மென்னறி யளவையின் வேண்டுவ முகத்துகொண் டின்மைதீன் வந்தனென் (பத்துப்-பொருநராற்-கக்க:உக்) இது யான் போகல்வேண்டுமெனக் கூறி விடுத்தபின், அவன் தந்த வளனை உயர்த்துக்கூறியது. நடைவயின் தோன்று: மென்றதனாற் சான்றோர் புலனெறிவழக்கஞ் செய்துவரும் விடைகள் பலவுங் கொள்க. அவை பரிசில் சிறிதென்று போகலும், பிறர்பாற் சென்று பரிசில் பெற்றுவந்து காட்டிப் போகலும், இடை நிலத்துப் பெற்ற பரிசிலை இடைநிலத்துக் கண்டார்க்குக் கூறுவன வும், மனைவிக்கு மகிழ்ந்து கூறுவனவும், பிறவும் வேறுபட வருவனவெல்லாங் கொள்க.

உதாரணம் :

"ஒருதிசை யொருவனை யுள்ளி நாற்றிசைப் பலரும் வருவர் பரிசின் மாக்கள் வரிசை யறிதலோ வரிதே பெரிது மீத லெளிதே மாவண் டோன்ற லதுநற் கறிந்தனை யாயிற் பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே’ (புறம்-க9.க)

இது சிறிதென்ற விடை