பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4


ஒன்றேயாகும். பிற்காலத்தில் தோன்றிய இறையனார் களவியல் புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலம், வீரசோழியம், நன்னூல், நேமிநாதம், தமிழ்நெறிவிளக்கம், அகப்பொருள் விளக்கம் முதலிய தமிழிலக்கண நூல்கள் யாவும் இத்தொல்காப்பி யப்பொருளை யுளத்துட்கொண்டு இயற்றப்பெற்றனவேயென்பது அந்நூல்களைத் தொல்காப்பியத்துடன் ஒப்புநோக்கி ஆராய் வார்க்கு இனிது புலனாம்.

தொல்காப்பியத்தில் எழுத்துஞ் சொல்லும் பொருளுமென வகைப்படுத்து விளக்கப்பெறும் உலகவழக்குஞ் செய்யுள் வழக்கு மாகிய மொழிநடை பற்றிய தமிழிலக்கண விதிகளைக் கூர்ந்து நோக்குங்கால், அவற்றுக்கெல்லாம் நிலைக்களமாகத் தொல் காப்பியனார் காலத்திற்கு முன் எத்துணையோ சிறந்த பல இலக் கியங்களும் அவற்றின் அமைப்பினை விளக்கும் இலக்கண நூல் களும் தமிழ்மொழியில் நிலைபெற்று வழங்கியிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாம். ஆசிரியர் தொல்காப்பியனார் தம் காலத்திலும் தமக்கு முன்னும் இயற்றப்பெற்று வழங்கிய தமிழிலக்கண இலக்கிய நூல்களையெல்லாம் நன்கு ஆராய்ந்து அவற்றின் விதிகளையெல்லாந்தொகுத்துத் தொல்காப்பியமாகிய இந்நூலையியற்றி யுதவினார் என்பது,

"வடவேங்கடந் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமி தியற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல்கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோனே’’

எனப் பனம்பாரனார் பாடிய சிறப்புப் பாயிரப் பகுதியால் இனிது விளங்கும்,

தமிழ்மொழியின் எழுத்துச் சொற்பொருள் என்னும் பாகு பாட்டின் இயற்கையமைப்பினைச் சிறிதும் சிதையாது பாது காக்கும் உயர்ந்த குறிக்கோளுடன் இயற்றப்பெற்ற தொல்காப்பிய மாகிய இந்நூல், பண்டைத் தமிழிலக்கியங்களின் அமைப் பினையும் பிற்காலத்தில் தோன்றி வழங்கும் பல்வேறு இலக்கியங்