பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுன் தொல்காப்பியம்-பொருளதிகாரம் - உரைவளம்

கெல்லாம் பொதுவாகிய வழுவேழும் உணர்த்துத னுதவிற்று; இவை வேத்தியலின் வழி இத் தன்னுறு தொழிலாய் வருதலின் வழுவாயின. இவை அகத்திற்கும் புறத்திற்கும் உரியவாய் வரு வனவும் புறத்திற்கெல்லாம் பொதுவாய் வருவனவுமாதலிற் பொதுவியலுமாயின.

(இ - ள்) வெறி அறி சிறப்பின்-தெய்வத்திற்குச் செய்யுங் கடன்களை அறியுஞ் சிறப்பினையும்; வெவ்வாய் வேலன்-உயிர்க் கொலை கூறலின் வெவ்வாயினையும் உடையனாகிய வேலன்; வெறியாட்டு அயர்ந்த காந்தளும்-தெய்வமேறி யாடுதலைச் செய்த காந்தளும்;

செவ்வேள்வேலைத் தான் ஏந்திநிற்றலின் வேலனென்றார். காந்தள் சூடி ஆடுதலிற் காந்தளென்றார். வேலனைக் கூறின மையிற் கணிகாரிகையுங்" கொள்க. காந்தளையுடைமையானும் பனந்தோடுடைமையானும் மகளிரை வருத்துதலானும் வேலன் வெறியாட்டயர்ந்த என்றதனானும் வேலன் ஆடுதலே பெரும் பான்மை; ஒழிந்தோர் ஆடுதல் சிறுபான்மை யென்றுணர்க.

இது சிறப்பறியா மகளிராடுதலிற் புறனாயிற்று; வேலனாடு தல் அகத்தினைக்குச் சிறந்தது."

இவற்றுட் சேயோன் கருப்பொருளாக மைவரை யுலகத்துக் கூதிர்யாமம் பொழுதாகச் சிறப்பறியும் வேலன் ஆடுதலின் வெறி யாடிய காந்தள் அகத்திற்கு வந்தது. இது வேத்தியற் கூத்தன்றிக் கருங்கூத்தாதலின் வழுவுமாய் அகத்திற்கும் புறத்திற்கும் பொது வாதலிற் பொதுவியலுமாயிற்று. 'வேலன் றைஇய வெறியயர் களனும்: (பத்து-திருமுரு-உ.உ.உ) என்றாற் போலச் சிறப்பறியும் வேலன் தானே ஆடுதலுஞ் சிறுபான்மை புறத்திற்குங் கொள்க.

1. புறத்திணைக்கெல்லாம் பொதுவாகிய வழு ஏழாவன, வெட்சி முதற் பாடாண் ஈறாகச் சொல்லப்பட்ட புறத்தினையொழுகலாறுகள் ஏழினும் வேந்துறு தொழிலானன்றித் தன்னுறுதொழிலாய்வழுவி வருவன என்பது நச்சினார்க்கினியர் கருத்தெனக் கருத வேண்டியு ளது.

2. கணிகாரிகையாவாள், வேலன் ஆடும் வெறிக்கூத்தினை ஆடுபவள்.

சிறப்பறியா மகளிர் என்றது, வெறியறி சிறப் பின் வேலனைப் போன்று ப்வத்திற்குச் செய்யுங் கடன்களாகிய பூசை முறைமையறியாத மகளிரை, ரிச் ஆடுதலிற் புறனாம் என்பதும், வேலன் ஆடுதல் அகமாம் என்பதும் நச்சி னார்க்கினியர் கருத்து.

4. வேத்தியற்கூத்து என்பது, வேந்தன் முதலிய மேன்மக்கள் கண்டு மகிழும் நுட்பமுடையதாய் உயர்ந்த பண்பு நலம் விளங்க வேந்தர து அவைக்களத்தில் ஆடப்படும் கூத்து. 2} ) கருங்கூத்து என்பது, உயர்ந்த பண்பு நலங்களின் றித் தாழ்ந்த நிலையில்

இழித்தோரால் ஆடப்படுங்கூத்து .