பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. அரசை ஆட்டிய அடிமை -

அளவறிந்து வாழாதவன் வாழ்க்கை படிப்படியே அழியும் என்ருர் திருவள்ளுவனர் இது குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பொருந்தும். குழந்தைப் பெருக்கம் பெரு நோய். அது பொரு எளியலை நசுக்கும் படை. இப்படையால் தாக்கப் பட்ட குடும்பம் நாடி தளர்ந்த நோயாளியாகும். ஒர் எளிய அடிமையும் அக்குடும்பத்தை ஆட்டிப் படைக்கக்கூடும். இக்கருத்தை மக்கட் பெருக்க முடைய அரசு ஒன்றை அடிப்படையாக வைத்து நகைச்சுவை கூட்டிக் காட்டும் நாடகம்.