பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் இயல்பும்

விரும்பும் ஒப்பனையும் :

வியாழனர் : நான் ஐம்பது அகவை நிறைந்தவன் ; சாத்திாம், சடங்குகளில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவன். முழுக் குடுமியை முடிந்து, அதை உள்ளிட்டு வெள்ளைத் தலைப்பாகையைக் கவித்துக் கொள்வேன். நெற்றியில் முப்பட்டைத் திருநீற. ணிந்து, நடுவில் பிறைவடிவச் சந்தனப் பொட்டிடு. வேன். காதில் வெள்ளைக்கல் கடுக்கன் அணிந்து,' மூக்கில் கண்ணுடி அமைப்பேன். முழு மீசையை முறுக்கிக் கொள்வேன். வெள்ளே முழுக்கைச் சட்டையின்மேல் முழு நீலக் கருப்புக் கோட்டை அணிவேன். அதன் பையில் வெள்ளிச் சரடோடு பை மணிப் பொறியைக் கொள்வேன், அறையில் சிவப்புக் கரையிட்ட வெள்ளை ஆடையை மூலக் கச்சாகக் கட்டுவேன். வெளியில் புறப்படும்போது கழுத்திலிருந்து இருபுறமும் மார்பு வழி விசிறி. மடியைத் தாழவிட்டுக் காலில் மிதியடி சேர்த்துக் கையில் பிரம்பைக் கொள்வேன்.'

செவ்வாயி நாற்பத்தைந்து அகவை நிறைந்த நான்

காலத்திற்கேற்பப் பழகிக் கொள்வேன். கூந்தலை அள்ளிச் செருகி, ஒரு பக்கம் கொண்டையிட்டுச் செவ்வந்திப் பூவைச் சூடுவேன். முகத்தில் மஞ்சள் பூசி நீராடி, அரக்குக் குங்குமப் பொட்டிடுவேன். பழங்காலத் தோடும், முக்குத்தியும் அணிவேன்.

ു്.-്.-്.സ......................... د:بیاہیم AeMAMMMMAeeSeeeeeMSAMSMSMSMSMSMSASAMMMMMMS

நடிகர்களுக்கு ஒப்பனை செய்வதன் குறிப்பாக இப்பகுதி

அமைக்கப்பட்டுள்ளது. மேடைக்கு வரும் esistes rriff:: - அறிமுகம் செய்து கெர்ள்வதாக அம்ைக்கப் எது