பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 x- நகைச்சு.ை

எங்கள் இயல்பும் : விரும்பும் ஒப்பனையும்:

பெருமாள் : நான் நாற்பத்தைந்து அகவையினன், மறதிக் குணத்தை வளர்த்துக் கொண்டவன். இல் லத்தில் பொன் இழை போட்ட வெண்பட்டை உடுப்பேன். முழுக்கைச் சட்டை அணிவேன், கையில் ஒரு கைத்துண்டு கொள்வேன். அற மள் றத்தில் அப்பதவிக்குரிய உடைகள் உடுப்பேன். உரிய முடி கொள்வேன். பிற நேரங்களில் வெள்ளைத் தலைப்பாகை சூடுவேன். எதிலும்

பரப்போடிருப்பேன்.

ஆமையப்பன் நாற்பது அகவையுடைய நான் அற மன்ற ஏவலனுக்குரிய வெள்ளை முழுக்காற் சட்டை மாட்டி மேலே வெள்ளை முழுக் கோட்டின் பெரும் பொத்தான்களைக் கழுத்து இறுக்கமாகப் பொருத்திக் கொள்வேன். முழு முறுக்கு மீசை உடையவன். வெள்ளைத் துணியைச் சற்று முறுக்கிப் பெரும் முண் டாசாகக் கட்டிக் கொள்வேன். எவ்வேலையையும் ஆமை ஊர்தலாய்ச் செய்வேன் என்பர்,

கணக்கன்: முப்பது அகவை உடைய நான் பழுப்புநிற முழுக்காற் சட்டை யணிந்து, முழுக்கை வெள்ளைச் சட்டை யணிந்து, செம்மைநிறக் கழுத்துக் கச்சை கட்டிக் கொள்வேன். நடுவே வகிர்ந்து தலையை. ஒப்பனை செய்து கொள்வேன். அரை மீசையாக நறுக்கிக் கொள்வேன். கையில் மணிப்பொறி கட்டி ஒரு பொன் கணையாழி சூடுவேன். காலில் கருப்பு அடிபுதை யரணத்தை உரிய காலுறையுடன் அணிவேன். எதையும் இயல்பறிந்து செய்பவன், எனப் பெயர் பெற்றவன்.