பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உற்ற பெரும் போரினிடை ஊறுபட்டு மாண்டவர்தம்
கொற்றமிகு கைமைகளிற் கொண்டணைக்க நாதியின்றி
அற்றமிலா வெந்துயருள் ஆழ்ந்துலைந்த பல்லோரைக்
குற்றமறப் பத்தின்ரியர்க் கொண்ட்மையுங் கேட்டோமே
கொண்டல்நபி நாயகமே கொண்டமையுங் கேட்டோமே!

அறப்போரில் உயிர்துறந்த அன்பர்கட்கு நன்றி காட்ட, போரில் கணவனை இழந்த பெண்களுக்கு அக்காலத்தில் ஏற்பட்ட அவலநிலையிலிருந்து அவர்களைக் காக்க, ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யாமல் தாமே இதிலும் முன்மாதிரியாய் இருக்கத்தான் விதவைகளைப் பெருமானார் மணந்து கெளரவம் தந்தார்.

அதுவும், ஐம்பத்து மூன்றுவயதுவரை தம்மினும் மூத்த மனைவி ஒருவருடனேயே வாழ்ந்திருந்து, இளமையெலாம் கழிந்த பருவத்தில் செய்து கொண்ட விதவைத் திருமணங்கள் அந்த விதவைகளுக்குப் பாதுகாப்பும் கெளரவமும் தரவேயன்றி வேறு எந்நோக்கத்திற்காகவும் அன்று. 'குற்றம் அறப் பத்தினியாக் கொண்டதைக் குற்றம் என்பார் எனில் அது அவர்கள் மதிக்குற்றம் தானே!

சிந்தையும் மொழியும் செல்லா இறையைச் சொல்லால் சொல்ல வருகிறபோது மொழிகாரணமாகவே சில குற்றங்கள் நேர்ந்து விடுவதுண்டு. குமரகுருபரர் ஒரு முறை கூறினர் இறைவா! உன்னே அவன் என்று அழைக்க முடியாது; ஏனென்றால் ஆணில்லை; அவள் என்று அழைக்க முடியாது; ஏனென்றால் நீ பெண்ணில்லை; நல்லவேளை தமிழில் அவர் என்ற பொதுச்சொல் ஒன்றிருப்பதால் நான் பிழைத்தேன்’ என்று. அதற்காக அவர் தமிழைப் பாராட்டுவார்.

பாவலரும் இறைவனைப் பற்றி உணர்த்த நினைக்கிறார். இதுவரை உலகம் எதை எதை இறைவன் என்று கருதிviii