பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


43

'உண்டியின்றிப் பட்டினியாய்
உற்றலைவோர் மாதுயரம்
மண்டியிட்டுப் பண்டிவிம்ம
வாரிஉண்ணும் வன்கணர்தாம்
அண்டிஅறி யார்கொல்’ என
ஆயதவ நோன்பு முப்பான்
எண்டிசையும் போற்றமக்கட்
கீட்டிவைத்த தோரேமோ

எங்கள் நபி நாயகமே!
ஈட்டிவைத்த தோரேமோ !

44

இன்மை உண்மை செல்வநிலைக்
கெய்தாமல் எல்லோரும்
நன்மைபெறும் ஒர்சமமாம்
ஞாயமிகு ஏழைவரி
வன்மையுடன் ஈந்துரிமை
வாய்ந்தபொரு ளாதாரத்
தன்மைகொளச் செய்தவுங்கள்
தத்துவமும் நத்தேமோ
சாந்திநபி நாயகமே
தத்துவமும் நத்தேமோ!

45

‘உள்ளுணர்வு போக்கிஅந்தோ
உன்மத்த நாய்போலும்
வள்ளுணர்வு தேக்கிஉயிர்
வாதையொடு போதை தரும்
கள்ளுணர்வு கொள்ளகிலீர்
தத்தனுரை ஈ தென்னத்
இதள்ளுணர்வு தந்துவந்த
செம்மைநிலை ஏதேயோ
திட்பநபி நாயகமே
செம்மைநிலை ஏதேயோ!