பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



40

'தாரமெனக் கொண்டவரைத்
தள்ளிமறு மாமனேவாய்ச்
சோரவிபச் சாரமதில்
தோய்ந்தலைந்த பாவமினித்
தீரவகை இல்லேஹரும்
செய்யகிலீர்’ என்றமறைச்
சாரம்எமக் கீந்தவுங்கள்
தண்ணளியு மென்னேயோ

சாந்தநபி நாயகமே
தண்ணளியு மென்னேயோ!

41

ஐயைந்து பக்குவத்திற்
காயகன்னி மார்கோடி
துய்யமணம் வேட்டுமவர்
சோரவிடுத் தையெட்டுச்
செய்யவய துள்இருவர்
சேர்ந்திருவர் செல்வரென
உய்யநல்கும் ஒர்விருத்தைக்
குள்ளுவந்த துள்ளேமோ

உண்மைநபி நாயகமே
உள்ளுவந்த துள்ளேமோ!

42

மக்களொடு சொத்தனத்தும்
மாநிலத்தின் ஆன்மாவோ
டொக்கவரும் நல்லழகாய்
உற்றிருப்பக் காண்பதன்றித்
தொக்ககருப் பத்தடையாம்
தொல்லைபுக்கு நெக்குருகி
மிக்கவினைக் காளாதல்
வீணென்ப தோரேமோ

மேன்மைநபி நாயகமே
வீணென்ப தோரேமோ!


15