பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


37

சின்னஞ் சிறுமகவைச்
சேர்த்தனைத்த கையோடு
தன்னந் தனியாகத்
தத்தளிக்குங் கைமைகளைத்
துன்னமறு மாமணத்தில்
தோய்வித்து வாழ்வித்தல்
என்ன குறை என்றுரைத்த
திந்நிலமு முன்னுதோ

ஏகநபி நாயகமே
இந்நிலமு முன்னதோ

38

தக்கவய தாம்வரையும்
சார்ந்தஇரு பெண்மகவை
ஒக்கவளர்த் தாவனசெய்
தோம்புமுயர் உத்தமர்தாம்
ஹக்கனருள் பெற்றுமகிழ்ந்
தாய்சொர்க்க வாழ்க்கையிலெம்
பக்கமிருப் பார்”என முன்
பன்னியது முன்னேமோ

பாரநபி நாயகமே
பன்னியது முன்னேமோ!

39

ஏவலுறு தொண்டொருவற்
கேய்ந்தசொந்த மைத்துணியை
மேவமணம் செய்வித்தும்
வேறுபட்ட தோர்ந்தவரை
ஆவலொடு கொள்ளமற்றோர்
அஞ்சுவர்னன் றஞ்சிஎன்றும்
பாவமற வேட்டுவந்த
பண்புடைமை தேரேமோ

பண்டைநபி நாயகமே
பண்புடைமை தேரேமோ!

14