பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

155



குறைஷிகளுடன் வந்த கூட்டத்தினரும் அவர்களைப் பின் தொடர்ந்து செல்லலானார்கள்.

மதீனாவைச் சுற்றிலும் கவிந்து கொண்டிருந்த யுத்த மேகமானது, இருபத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு கலைந்து விட்டது

இந்தச் சண்டையில் முஸ்லிம்களுக்கு உயிர்ச் சேதம் மிகவும் குறைவுதான். ஆனால் அவர்களுக்குப் பாலமாகவும், ஒளஸ் குடும்பத்தாரின் தலைவராகவும் இருந்த ஸஅத் இப்னு முஆத் என்பவர் பலத்த காயமுற்றார்.


117. தோல்வியும் தண்டனையும்

அகழ்ச் சண்டை முடிவானதும், படைகள் ஆயுதங்களைக் கீழே வைக்காமல் பனூ குறைலா கூட்டத்தார் வசிக்கும் இடத்துக்குச் செல்லுமாறு, பெருமானார் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

அவர்கள் சமாதானத்துக்கு வருவதாயிருந்தால், போதிய காரணத்தைக் கொண்டு அவர்களுடன் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் அங்கு சென்றார்கள்.

ஆனால், யூதர்கள் சண்டை செய்வது என்றே தீர்மானித்து விட்டனர்.

அலி அவர்கள் முஸ்லிம் படைகளுக்கு முன், யூதர்களின் கோட்டைக்கு அருகில் சென்ற போது, பெருமானார் அவர்களை யூதர்கள் பகிரங்கமாக நிந்தனை செய்தார்கள்.

அவர்களுடைய கோட்டைகள் முற்றுகை இடப்பட்டன.

ஒரு மாதம் வரை முற்றுகை நீடித்தது.

இறுதியில், யூதர்கள் பணிந்து, ஸஅத் இப்னு முஆத் ஏற்படுத்தும் நிபந்தனைகளை ஏற்பதாக ஒப்புக் கொண்டனர்.

குறைலா கூட்டத்தாருக்கும் ஸஅத் குடும்பத்துக்கும் வெகு காலமாக நட்பு இருந்து வந்தது. அதைக் கருதி, தங்களுக்குச் சாதகம்