பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

223



172. பொருள் பங்கீட்டில் மனக்கசப்பு

பெருமானார் அவர்கள் தாயிபிலிருந்து அல்ஜிஃரானாவுக்குத் திரும்பி வந்தார்கள்.

ஹூனைன் சண்டையில் பிடிபட்ட கைதிகளையும் பொருட்களையும் ஜிஃரானாவில் வைத்திருந்தார்கள் அல்லவா? கைதிகளின் உறவினர்கள் வந்து அவர்களை மீட்டுக் கொண்டு போகக் கூடும் என்று நினைத்தார்கள். அதனால் சில நாட்கள் வரை பெருமானார் அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். எவரும் வரவில்லை. எனவே கைதிகளையும் பொருட்களையும் பங்கிடச் செய்தார்கள். ஐந்தில் ஒரு பகுதியை, பொது நிதிக்காகவும் ஏழைகளுக்காகவும் ஒதுக்கி வைத்து, மீதி நான்கு பாகத்தையும், படைகளுக்குப் பங்கிட்டார்கள். பங்கிடும் போது, இஸ்லாத்தில் புதிதாகச் சேர்ந்த மக்காவாசிகளுக்கு வீதாச்சாரத்திலிருந்து சிறிது கூடுதலாகவே கொடுத்தார்கள்.

அன்ஸாரிகளில் சில இளைஞர்கள் அதை அறிந்து, "ரஸூலுல்லாஹ் அவர்கள் குறைஷிகளுக்குக் கூடுதலாகக் கொடுத்து விட்டார்களே” என்று குறைப்பட்டனர். வேறு சிலரோ "கஷ்டத்தின் போது நம்மை நினைப்பதும், சண்டையில் கிடைத்த பொருட்களை மற்றவர்களுக்குக் கொடுப்பதுமாயிருக்கிறதே” என்று கூறலானார்கள்.

அன்ஸாரிகளிடையே அதிருப்தி நிலவுவதை அறிந்த பெருமானார் அவர்கள், அவர்களை அழைத்து, "குறைஷித் தலைவர்களுக்கு நான் அதிகமாகக் கொடுத்ததாக நீங்கள் சந்தேகப்பட்டுக் கூறியது உண்டா?" என்று வினவினார்கள்.

அவர்கள் சத்திய சீலர்களானதால், “எங்களில் பெரியவர்கள் யாரும் எதுவும் கூறவில்லை. இளைஞர்களில் சிலர் மட்டும் அப்படிச் சொன்னார்கள்” என்று கூறினார்கள்.

அப்பொழுது, பெருமானார் அவர்கள் அன்ஸாரிகளிடம், “நீங்கள் ஆரம்பத்தில் வழி தவறியவர்களாக இருந்தீர்கள். ஆண்டவன் என் மூலமாக உங்களை நேர்வழிப்படுத்தினான். நீங்கள் பல பிரிவுகளாகி, பகைமை உணர்வோடு இருக்கையில், ஆண்டவன் என் மூலமாய்