பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2



அவர்கள் போகும்போது, 'உண்மையும், நேர்மையும் உடைய அல் அமீன் அதோ போகிறார்கள்' என்று சுட்டிக் காட்டி மக்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வார்கள்.

பொருள் வாங்குவதற்காகப் பெருமானார் அவர்கள் கடைக்குப் போகும் பொழுது, வழியில் இருக்கும் ஏழை எளியவர்களின் வீட்டுக் கதவைத் தட்டி, “முஹம்மது கடைக்குப் போகிறார். உங்களுக்குத் தேவையான பொருள்களைச் சொல்லுங்கள். வாங்கி வருகிறேன்” என்று கூறுவார்கள். அவர்கள் சொல்லும் பொருள்களை அவ்வாறே வாங்கி வந்து தருவார்கள்.


12. பொறுமை மிக்கவர்கள்

மக்காவிலுள்ள குறைஷி இனத்தவர்களுக்கு வியாபாரமே முக்கியத் தொழிலாக இருந்து வந்தது.

பெருமானார் அவர்களின் மூதாதையருக்கும் அதுவே தொழிலாக இருந்தது.

ஒரு வியாபாரிக்கு வேண்டிய முக்கிய அம்சங்களான நம்பிக்கையும், வாக்குறுதியும் பெருமானார் அவர்களிடம் முழுமையாக அமைந்திருந்தன.

அப்துல்லாஹ் இப்னு அபில் அம்ஸா என்னும் வர்த்தகருக்கும், பெருமானார் அவர்களுக்கும் சரக்குகள் கொடுக்கல், வாங்கல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ஒரு சமயம், தமக்கு வேண்டிய சாமான்களை வாங்கிக் கொள்வதற்காக, பெருமானார் அவர்களிடம், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வருவதாக, அப்துல்லாஹ் இப்னு அபில் அம்ஸா என்பவர் கூறிச் சென்றார். ஆனால், என்னவோ மறந்துவிட்டார். காலம் கடந்து அங்கே போன சமயம், பெருமானார் அவர்கள் அவ்விடத்திலேயே அவரை எதிர்பார்த்து இருக்கக் கண்டார். எனினும் அவரிடம் பெருமானார் அவர்களுக்குக் கோபமோ வருத்தமோ உண்டாகவில்லை.