பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

vi



அவர்களும், ஜனாப் எம் கே. ஈ. மவ்லானா அவர்களும், வரலாற்றை வேறு புதிய கோணத்திலிருந்து ஆய்ந்துள்ளார்கள். காலக் கண்ணாடியின் அடிப்படையில் வரலாற்றைக் கூறாமல், மாநபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டு, அவற்றால் மனிதன் பெற வேண்டிய நற்பண்புகள் யாவை, படிப்பினைகள் எவை என்ற அகன்ற அடிப்படையில் ஆய்ந்து இந்நூலை இணைந்து இயற்றியுள்ளார்கள். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, பொதுவாக தமிழ் நல்லுலகினர் அனைவரும் படித்து இன்புறுவதற்காகவே இந்நூலைப் புதிய முறையில் எழுதியுள்ளார்கள்.

திரு. முல்லை முத்தையா அவர்கள் தமிழ் நூல்களின் ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் தம் வாழ்நாட்களை அர்ப்பணித்தவர்கள்; சிறந்த தமிழ் வல்லுநர்; வாழ்க்கைச் சுமைகளிடையே மதிப்பு, பொறுப்பு, தாங்கொணாத நஷ்டங்களைச் சுமத்திய நிலையில் நபிகள் நாயகத்தின்(ஸல்) வரலாற்றை ஆய்ந்து, மனம் உருகி, மனம் ஒன்றி, இந்நூலை இயற்றியுள்ளார்கள்.

தமிழ்த் தென்றல் போல, சுவையான செய்திகளைப் பசுமையாகவே தரத் தக்க ஆற்றல் படைத்த “பசுங்கதிர்" ஆசிரியர், கலாநிதி ஞானக் கவிச்சித்தர் எம்கே.ஈ. மவ்லானா அவர்களை இஸ்லாமிய உலகும், பத்திரிகை உலகும் நன்கு அறியும். நல்ல தமிழ் எழுத்தாற்றல் படைத்தவர்கள்; பல நூல்களை எழுதியவர்கள்; அவர்களும் இணைந்து இந்நூலை எழுதியுள்ளார்கள்.

இந்நூல் பற்பல பதிப்பாக, மலர்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடத்தில் இறைஞ்சி “துஆ” செய்தவனாக, இந்நூலுக்கு என் பாராட்டுரையை அளிக்கின்றேன். ஆமின்!

ஹ.அமிர் அலி