பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பார்வ சிபாய் அகவலே உதவுதலும் கடவுள்வழிபாடே என்னும் எண்ண முடையவர் அல்லர்: குலஆசாரம், பழைய பழக்க வழக்கங்கள் முதலியவைகளில் அவ் வம்மையார் பெரிதும் நம்பிக்கை புடையவர் ; வீட்டுவேலேகள் பலவற்றையும் சிறிதும் சலிப்பின்றிச் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்தவர். அவ் வம்மையார் தம் வீட்டிலுள்ள பசுக்களையும் எருமைகளையும் தாமே கவனித்துக்கொள்வார் ; பிறகு வயலுக்கும் சென்று வருவார் : ஒழிவு நேர்ந்தபோது வாணிகத்தையும் பார்த்துக்கொள்வார். f குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு அவ் வம்மையாருக்கே உரியதாய் இருந்தது. ஆண்குழந்தைகள் கற்பதற்கு அவ் வூரில் பள்ளி ஒன்றேனும் இல்லை. அத்தகைய வூரில் பெண்கல்விக்குரிய கிலேயம் எவ்விதம் இருக்க இயலும் ? வீட்டைப் பெருக்குதல், மெழுகுதல், அரிசி திட்டுதல், சோறுசமைத்தல் ஆகிய இவைகளே பெண்கள் அறிந்திருக்க வேண்டியவை என்று அவ் ஆரினர் எண்ணினர். ஆதலின் ஆங்குப் பெண்கல்வியைக் குறித்த பேச்சே எழுந்ததில்லை. அன்றியும், அந்தக்காலத்தில் இருந்த அந்தணர்கள் தங்கள் பெண்களுக்கு மிக்க இளம்பருவத்திலேயே மணம்முடித்துவிடுவர். எவ்வளவு இளம்பருவத்தில் திருமணம் நிகழ்கின்றதோ அவ்வளவு அந்தப் பெண்களுக்குப் பெருமை. அவ்வாறன்றி, வயது நீடிக்க நீடிக்க அக் குழந்தையின் பெற்றேர்கள் பெரிதும் துன்புறுவர். பார்வதிபாய்அம்மையார் இதனைத் தம் இளவயதிலேயே நன்கு அறிக் திருந்தார். அதல்ை அவர், தமக்கு இளமையிலேயே திருமணம் நிகழ்தல் வேண்டும் என்றும், தம்மால் தம் பெற்ருேர்கட்குச்