பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-44 பார்வகிபாய் அதவலே கண்டு பார்வதிஅம்மையார் பெரிதும் இட ருற்ருள். ஆங்கிலமும் அறிந்திருப்பின் நோக்கம் மிகவும் எளிதில் .கிறைவேறும் என்பதை அம்மையார் உணர்ந்தார். பெரியார் கார்வே அவர்களும் அம்மையாரின் கருத்தை ஆதரித்தார். ஆதலால் பார்வ திஅம் மையார் தமக்கு ஒழிவு நேர்ந்தபோதெல்லாம் ஆங்கிலம் கற்க முயன்றுவங்கார். கைம்பெண் இல்லத்தில் ஆசிரியர்பதவி ஏற்ற அன்றே கம் அம்மையார் ஆங்கிலம் கற்கத் துவங்கிர்ை. ஆனல் கவலே மிகுதியால் அவ் வெண்ணம் தடையுற்றது. பிறகு பொருள் தேடத் துவங்கும்போது நேர்ந்த இடர்ப்பாடுகளே நினைத்து, மீண்டும் ஆங்கிலம் கற்கத் துவங்கினர். அப்போதும் அவ் வெண்ணம் சரிவர் நிறைவேறவில்லே. இவ்விதம் பல முறை முயன்றும் அவ்வெண்ணம் கைகூடாமற் போகவே, தம் வேலைகளே யெல்லாம் அறவே நிறுத்திவைத்தேனும் ஆங்கிலம் கற்கவேண்டுமென்று அம்மையார் தீர்மானித்தார். அப்போது அவருக்குச் சுமார் நாற்பத்து நான்கு வயது இருக்கும். சட்டைக்காரர் என வழங்கப் பெறும் ஆங்கிலோஇந்தியர்பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள பள்ளியில் சென்று படித்தால் மிக எளிதில் ஆங்கிலம் பேசவும் எழுதவும் தெரிந்துவிடும்' என்று சிலர் கூற, அவ்விதமே அத்தகைய பள்ளியில் சென்று படிக்க கம் அம்மையார் விழைந்தார். உணவுவிடுதி அமையப் பெற்றதும் கிறிஸ் துவக்கன்னிகைகளால் கடத்தப்பட்டதுமான ஒரு