பக்கம்:நற்றிணை-2.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 367 சொல்வதானல், என்னை மெலிவிக்கின்ற ஒரு நோயாக ஆகின்றனளே? அதுதான் தீருமாறு, பனை மடலாலே செய்த குதிரையை ஏறிவந்தும், ஆவிரை எருக்கம் போன்ற மலர்களா லான மாலையைச் சூடியும், இடமகன்ற வைப்புக்களையுடைய நாடுதோறும் ஊர்தோறும், ஒள்ளிய் நுதலுடையாளின் அழகினைச் சிறப்பித்துக் கூறியப்டியாகச் செல்வதனை மேற் கொள்ளாதேம் ஆகி, அரிதாக நிலைப்படுத்தி, அதுவே பிணியாக நலிவிக்க, இறந்து போகவும் மாட்டேமோ? நெஞ்சமே! இனி, என்செய்வேம். - க்ருத்து : "அவள் நோயால் சாவதுதான் செயத்தக்கது போலும் என்பதாம். சொற்பொருள் : மடல்மா - பனைமடலாலாகிய குதிரை. மாலை . எருக்கும் ஆவிரமும் பூளையும் விரவிக் கட்டிய மாலை. வைப்பு - நிலப்பகுதி. நலம். அழகு முதலியன. அரிதுற்று - அரிதாக நிலைப்படுத்தி வைத்து: அஃதாவது அடக்கற்கரிய ஆசையையும் அடக்கி நிறுத்தி வைத்து. குறைபடுத்தல் விழுங்கி ஒரு பகுதி மட்டும் வெளித்தோன்றுமாறு விட்டு வைத்திருத்தல்; கூந்தல் நாகமாகவும், நுதல் நிலவாகவும் கொண்டு நுதலானது நாகத்தால் குறைபடுத்தப்படுத்தப்பட்ட நிலவுபோலத் தோன்றும் என்றன்ன். மேவலம் - மேற் கொள்ளமாட்டோம். அது - அவள் தந்த காமநோயாகிய அது. விளிதல் - சாதல். பசுங்கதிர் மதியம் - பசுமையான கதிர்களையுடைய மதியம். அளகம் - கூந்தல். கழறுபு - சொல்வதற்கு. மெலிக்கும் - மெலிவிக்கும். - விளக்கம் : அவளைச் சிறப்பித்துக் கூறியது, அவள் தந்த முன்னைய இன்ப நினைவுகளினலேயாகும். ಳ್ಗಿ இன்பந் தந்தவள், இதுகால் அரவுக்குறைபடுத்த நிலாப்போல, எனக்குத் துன்பந்தருவதேன் என்பவன், சிறுநுதலுக்கு ஆரவுக் குறைபடுத்த அக்னில்ாவை உவமை கூறுகின்ருன். நோய் கொண்டு மெலிந்து மெலிந்து முடிவில் இறத்தலையே. அடைவோம் என்பவன், மடலேறி வருதலையும் மேவ்லம் என் கின்றனன். மடலேறியும் மனமிரங்காளாயின், வரைபாய்ந்து உயிர்துறத்தலே ச்ெயத்தக்கது என உறுதிபூண்டு மடலேறத் துணிந்தர்கைச் சொல்லியது எனவும் கொள்ளலாம். இதனை உணரும் தலைமகள் அவனுடைய ஆழமான அன்பின் வேகத்தை அறிந்து, அவனுக்கு உதவுதற்கு மனம் நெகிழக் கூடும் எனலாம். குவிமகிழ் எருக்கம் கண்ணியும் குடும்" எனவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/371&oldid=774513" இலிருந்து மீள்விக்கப்பட்டது