பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25


ஈருள்ளிச் சாறு இண்டின் சாறு ஆமணக்கெண் ணெய் சமநிறையாக எடுத்துக் காய்ச்சி உள்ளுக்குக் கொடுக்கவும்.

விஷ மாந்தத்தின் குணம்

வயிறு வலிக்கும், சுரம் காயும், உடல் வியர்க்கும், அரையின்கீழ்க் குளிர்ந்திருக்கும், மலச்சிக்கல் இருக்கும், குழந்தை அடிக்கடி வாந்தி எடுக்கும்.

நுணா நொச்சி வேளை இவற்றின் வேருடன் ஓமம். பூண்டு, வசம்பு, பொடுதலை இவைகளைச் சமமாகத் தட்டிக் கஷாயம் செய்து சங்கு அளவு கொடுக்கவும்.

துலை மாந்தத்தின் குணம்

அடிக்கடி குழந்தை வாந்தி எடுக்கும். கொட்டாவி விடும். முகம் கடுப்பாக இருக்கும். உடல் வியர்க்கும். வலிப்புக் கண்டு கை, கால் விறைக்கும்.

வசம்பு, முடக்கொத்தான், தைவளை, திரிபாலே, திரி கடுகு, அழிஞ்சி வேர் இவைகளைச் சமநிறையாக எடுத்துத் தட்டி விளக்கெண்ணெயிற் போட்டுக் காய்ச்சி உள்ளுக் குக் கொடுக்கவும். உடலின் மேலும் பூசலாம்.

வெள்ளைக் காக்களுன் வேர் ஓர் கோலி அளவு அரைத்து முலைப் பாலில் கலந்தும் கொடுக்கலாம்.

நீர் மாந்தத்தின் குணம்

தலை வலிக்கும், முகம் மினுக்கும், கை கால் தின வெடுக்கும், நீர் கடுக்கும், வாந்தி எடுக்கும், உடல் மெலி யும், வயிறு பொருமிக் கழியும், உடல் சிலிர்க்கும், பால் குடியாது.