பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

நொச்சி வேளை மேனி நுணு பெருந்தும்பை இவை களின் இலையை வெதுப்பிச் சாறு பிழிந்து ஓமம், வசம்பு, மிளகு, பூண்டு இவைகளே நறுக்கி அரைத்துக் கலக்கிக் கொடுக்கவும்.

தலை மாந்தத்தின் குணம்

அடிக்கடி கொட்டாவி விடும், கைகால் குளிரும், தலை கணக்கும், முகம் வியர்க்கும், உடல் ஊதிப் புண்போல நோகும், வயிறு பொருமும், வலிக்கும்.

வேலிப் பருத்தி, வெள்ளறுகு, வெதுப்படக்கி, பெருந் தும்பை இவைகளின் இலையை வதக்கிச் சாறு பிழிந்து அதில் வசம்பு, திப்பிலி, சதகுப்பை, தேசாவரம், பூண்டு, இவைகளை ஓர் நிறையாக எடுத்து வறுத்து அரைத்துக் கலந்துவைத்துக்கொண்டு உள்ளுக்குக் கொடுக்கலாம். உடலின் மேலும் பூசலாம்.

செரியா மாந்தத்தின் குணம்

தல வலிக்கும், வயிறு நோகும், குழந்தை சீறி அழும், மாவாய்க் கழியும், சுரங்காயும், உடல் சோர்வுற்று இருக்கும். அரைவிழியுடன் தூங்கும்.

1. வசம்பு, ஓமம், கோஷ்டம் இவைகளை வகைக்கு வராகன் எடை எடுத்து கஷாயம் செய்து கொடுக்கவும்.

2. ஓமம், பூண்டு, கருஞ்சீரகம், சடாமாஞ்சில், வசம்பு, திரிகடுகு, ஆமையோடு இவைகளைச் சம எடை எடுத்துப் பொடி செய்து கஷாயமாக்கிக் கொடுக்கலாம்.

3. எருமை வெண்ணெயில் இஞ்சியும் பெருங் தும்பையும் தட்டி வேகவைத்துக் கொடுக்கலாம்.