பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31



கண் ரோகத்திற்கு

பீதரோகணியை முலைப்பாலில் அரைத்து அதைக் கண்களில் பிழிந்து வரவும். கண் சோகம் நீங்கும்.

பாம்புக் கடிக்கு

பூனைக்காஞ்சேரியிலைச் சாறும், தும்பை யிலைச் சாறும் இரண்டும் ஒன்ருய்க் கூட்டி உள்ளுக்கேற்றவும். பாம்பு விஷம் இறங்கும். அல்லது பாம்புக் கடி வாயிற் கீறி அச்சாற்றைத் தேய்த்திடினும் விஷமிறங்கும்.

அழற் பித்தம் தீர

இலங்தைப் பழங்களைத் தின்ருல் அழற்பித்தம் நீங்கும்.

தலைவலிக்கு

கரிசலாங்கண்ணி இலையில் பூண்டும், கொஞ்சம் மிளகும் வைத்து அரைக்கவும். காலை வேளையில் நெல் லிக்காய் அளவு மூன்று நாட்கள் சாப்பிடத் தலை வலி தீரும்.

கண் குளிர்ச்சிக்கு

விரை நீக்கிய வில்வப் பழத்தின் சதையை நல்லெண்ணெயில் கலக்கி அதற்குச் சமமாகப் பசும் பாலும் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி இறக்கிவிடவும், வாரத் திற்கு இருமுறை உச்சந்தலையில் தேய்த்துக் குளித்தால் கண் குளிர்ச்சி பெறும். பார்வையும் உண்டாகும்.

கபத்திற்கு

கரிசலாங்கண்ணிச் சாற்றில் கடுக்காயைத் தூள் செய்து இரண்டு விரல்களால் உள்நாக்கில் புகும்படி தேய்க்கவும். கபமானது கோழையாய் விழும்.