பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33


மார்புச் சளிக்கு

தேற்ருன் விதையைத் தண்ணீர் விட்டரைத்திடச் சந்தனம்போல் இருக்கும். அதை இரண்டு அல்லது மூன்று தடவை உட்கொள்ள மார்புச் சளி நீங்கும்.

கரைச் சூட்டிற்கு

நுணா இலைச் சாற்றைப் பிள்ளைகளுக்குப் புகட்டினல் கணச் சூடு நீங்கும்.

வாந்தி அடங்க

நெல்லி வற்றலும், திப்பிலியும், நெற் பொரியும், சீரகமும் ஆகிய கர்ன்கையும் காய்ச்சிக் கஷாயமாக்கி வடிகட்டி உட்கொள்ளவும். வாந்தி அடங்கிவிடும்.

சன்னிக்கு

சன்னி கண்டபொழுது கஸ்தூரி பிரயோகிக்கவும்.

நீர்க் கோவைக்கு

கறிவேப்பிலையை இடித்து வஸ்திர காயஞ் செய்து சீனி கலந்து தினசரி காலை மால் கால் டி ஸ்பூன் அளவு உட்கொள்ள நீர்க்கோவை, சூதக வாய்வு முதலியவை தீரும்

மூல உபாதைக்கு

முருங்கைப் பூவும் குமரிச் சோறும் இவ்விரண்டும் வெண்ணெயிலரைத்து எலுமிச்சம்பழத்தம் மூன்று நாள் உட்கொள்ளவும். கடும் பத்தியம் இருக்க வேண்டும். மரி=சோற்றுக் கற்றாழை).