பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

நல்ல பிள்ளையார்


தெரியும். அந்த நேரத்துக்கு முன்பே வந்து காத்திருக்கும். இலைவிழுந்தவுடன் வயிறாரச் சாப்பிடும். ஒரு நாள் அதற்குப் போட்டியாக ஒரு பிராணி வந்து சேர்ந்தது. ஒரு காளைக் கன்றுக்குட்டி வந்து அந்த இலைகளை எச்சில் உணவோடு தின்னத தொடங்கியது. அதைப் பார்த்ததும் குரைத்துக் கடிக்கப் போயிற்று நாய். அந்த மாடு தன் கொம்பினால் அந்த தாயை ஒரு கொந்து கொந்தித் தூக்கி எறிந்து விட்டது. நாய், 'இதனோடு சண்டை போடு வதில் லாபம் இல்லை; சமாதானமாகப் போவது தான் நல்லது' என்று எண்ணியது. அடுத்த நாள் நாய் வந்தது, காளைக் கன்றும் வந்துவிட்டது. 'காளை அண்ணே, உனக்கு வணக்கம். நான் நெடுநாளாக இந்த எச்சில் இலையைத் தின்று வாழ்ந்து வருகிறேன். இதை விட்டால் எனக்கு வேறு வழியில்லை. உனக்கோ மேய்வதற்கு எங்கும் புல்தரை இருக்கிறது. நீ ஏன் எனக்குப் போட்டியாக வருகிறாய் ? உன்னைப் பார்த்தால் நல்லவனாகத் தெரிகிறாய். நான் தெரியாமல் நேற்று உன்னைக் கடிக்க வந்தேன். என்ன மன்னித்து விடு. பெரிய மனசு பண்ணி எனக்கு உணவு கொடு. இல்லாவிட்டால் நான் பட்டினி கிடந்து செத்துப் போவேன்' என்று மிகவும் பணிவோடு நாய் கூறியது.


"புல் இருக்கிறது உண்மைதான். ஆனாலும் வாழையிலை என்றால் எனக்கு மிகவும் பிரியம்' என்றது காளை.