பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நல்ல பிள்ளையார்

சந்திரனே வடை, அப்பளம், வாழைப்பழம், மாம்பழம், லட்டு ஒன் ைற யும் தின்னமல் அம்மாவுக்காக எடுத்து வைத்துக்கொண்டான், 'அம்மா பாவம், எங்கே போவாள்? நாமாவது யார் வீட்டில் கல்யாணம் நடந்தாலும் போய்ச் சாப்பிட முடியும்’ என்று எண்ணி அவற்றை ஜாக்கிரதை யாகத் தனியே வைத்துக் கொண்டான், • * * .

சாப்பாடு முடிந்தது, எல்லோரும் தங்கள் தங்கள் வீட்டுக்குப் போனர்கள். சூரியன் முதலிய நான்கு பிள்ளைகளும் தம் வீட்டை அடைந்தார்கள். . .

அவர்களைக் கண்டவுடன் அம்மா, எனக்குப் பட்சணம் கொண்டு வந்தீர்களா ?’ என்று

கேட்டாள், - -

- அங்கே - பட்சணமே போடவில்லை' என்று சூரியன் பொய் சொன்னன்,

"எல்லாருக்கும் போட்டார்கள், நான் ஒரு மூலே யில் உட்கரர்ந்திருந்தேன். எனக்குப் போட மறந்து விட்டார்கள். கேட்க வெட்கமாக இருந்தது” என்ருன் வாயு.

பட்சணம் மிகவும் கொஞ்சமாகத்தான்

போட்டார்கள். அதை நானே தின்றுவிட்டேன்’ என்ருன் வருணன். . . . . . - - சந்திரன் மட்டும், "அம்மா, உனக்கு எல்லா வற்றையும் கொண்டு வந்திருக்கிறேன்’ என்று சொல்லி அவற்றை அம்மாவிடம் தந்தான். அவள்