பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு நத்தை தன் முதுகின்மேல் தன் கூட்டைத் தூக்கிக்கொண்டு மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது. தலையில் இரண்டு கம்பிபோல இருந்த கொம்பை நீட்டிக் கொண்டு நிதானமாகப் போயிற்று. அப் போது ஒர் ஆமை அங்கே மெல்ல நகர்ந்து வந்தது. அதன்மேல் சிறிய பாறை போன்ற ஒடு இருந்தது. தன் முதுகிலிருந்து எடுக்க முடியாமல் ஒட்டிக் கொண்டிருந்த அந்த ஓட்டை விட்டுவிட்டுக் குசாலாக நடக்க முடியவில்லையே என்று ஆமை வருத்தப் பட்டது. அப்போது நத்தை கண்ணில் பட்டது: "அடேயப்பா ! இது தன் வீட்டையே தூக்கிக் கொண்டு நடக்கிறதே!” என்று ஆச்சரியப் பட்டது. -