பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு யானைகள் 29

சிறிது நேரம் அங்கே நின்றவன் பிறகு தன் யானையை ஒட்டிக்கொண்டு போனன். அது முதல் ஒவ்வொரு நாளும் அவன் தன் யானையின்மேல் ஏறி வரும்போது கோயிலுக்கு அருகில் நிறுத்து வான். கோயில் யானே வரும், இரண்டு யானே களும் கொஞ்சிக் குலாவும், அரசனுக்கும் மகிழ்ச்சி உண்டாகும். -

அன்று கோயிலில் ஏதோ விசேஷம், கோயில் யானைக்கு நன்ருக அலங்காரம் பண்ணினர்கள். அதை வெளியிலே கொண்டு வந்து நிறுத்தினர்கள். உற்சவ மூர்த்தியை அதன் மேல் எழுந்தருளப் பண்ணி ஊர்வலம் விட்டார்கள். அப்போது அரசன் அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டான், களிற்றின்மேல் ஊர்ந்து வந்தான். பிடியின் மேல் கிருஷ்ணனும் களிற்றின்மேல் அரசனும் இருந்தார் கள். இரண்டு யானைகளும் ஊர்வலமாக வரும் போது மக்களுக்கு அந்தக் காட்சியைக் கண்டு ஒரே கோலாகலமாக இருந்தது.

ஊர்வலம் முடிந்து கிருஷ்ணன் மீண்டும் கோயிலே அடைந்தான். அரசனும் தன் களிற்றின் மேல் கோயிலுக்கு வந்து சேர்ந்தான். ஊர்வலம் முடிந்தது; இனி யானையை அரசன் அரண்மனைக்கு ஒட்டிச் செல்ல வேண்டியதுதான்,

ஆல்ை அவன் யான அங்கிருந்து நகர மறு த் தது. யானைப் பாகன் அதை என்ன